super star rajinikanth golu : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கொலு கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகின்றன. நாள் தோறும் ரஜினிகாந்த் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கொலுவை பார்வையிடவே பிரபலங்கள் விசிட் அடித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பேரக்குழந்தைகள் ஆசைக்காக இந்த வருடம் பிரம்மண்டமாக கொலு வைத்து அசத்தி இருக்கிறார் ரஜினிகாந்த்.
Advertisment
நேற்றைய தினம் நவராத்திரி கொலுவில் பிரபல நடிகரும், இயக்குநரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டார். அதுமட்டுமில்லை ரஜினிகாந்தின் செல்ல மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் தங்களது சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தா, நடிகை ஸ்ரீதேவி, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவை அழைத்திருந்தனர்.
சூப்பர் ஸ்டார் வீட்டு அழைப்பு என்றால் கேட்கவா வேண்டும்? ஒட்டு மொத்த பிரபலங்களும் வித விதமான கொலு கிஃப்டுகளுடன் ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு வருகின்றனர். இதுக் குறித்து ஸ்பெஷல் கேலரி இதோ/..
Advertisment
Advertisements
இந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களாக ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.