உண்மையில் வாஷிங்மெஷின் என்பது வீட்டு உபயோகப் பொருட்களில் முக்கியமான ஒன்றுதான். துணி துவைக்கும் வேலையை மிச்சப்படுத்துகிறது. ஆனால், அது என்னதான், காஸ்ட்லி வாஷிங் மெஷினாக இருந்தாலும், அழுக்கான வெள்ளைத் துணிகள், அதாவது, சட்டை காலர், கை பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்கு, வெள்ளை பாண்ட்டில் கால் பகுதியில் படிந்திருக்கும் அழுக்கு போவதில்லை.
அதனால், இது போன்ற அழுக்கான வெள்ளைத் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்த பிறகும், அழுக்கு போகாமல் இருக்கும் வெள்ளைத் துணிகளை பலரும் கைகளால் துவைக்கிறோம். ஆனால், இந்த டிப்ஸைப் ஃபாலோ பண்ணி வெள்ளைத் துணிகளை பளிச் சென வாஷிங் மெஷினிலேயே சலவை செய்யலாம். அதற்கு ஒரு பொருள் வேண்டும். அது என்ன பொருள், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கீழே கூறுகிறோம்.
உங்கள் வீட்டில், ரொம்ப அழுக்கான துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்தாலும் அழுக்கு போகவில்லையா கவலையே படாதீர்கள். ஒரு பாக்கெட் ஈனோ போதும். குறிப்பாக வெள்ளைத் துணிகளை பளிச் சென சலவை செய்யலாம்.
அழுக்கு துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, லிக்யூட் ஊற்றிவிட்டு அதனுடன் ஒரு பாக்கெட் ஈனோ (ENO) பவுடர் கொட்டி கலந்து விடுங்கள். இந்த ஈனோவில் உள்ள வேதிப் பொருள் துணிகளில் உள்ள அழுக்கை முழுவதுமாக போக்கிவிடும்.
குறிப்பாக, வெள்ளைத் துணிகளைத் துவைக்கும்போது, வீட்டில் துவைக்க வேண்டிய வெள்ளைத் துணிகளை எல்லாம் எடுத்து வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, லிக்யூட் ஊற்றி அதனுடன் ஈனோ (ENO) பவுடர் ஒரு பாக்கெட் கொட்டி கலந்து விடுங்கள். பிறகு, வாஷிங் மெஷினை ஆன் செய்து துவையுங்கள். வெள்ளைத் துணைகள் பளிச் என சலவை செய்யப்பட்டிருக்கும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.