வேகமாகவும் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் உலகில், தினசரி சவால்களுக்குச் செல்வதற்கு உகந்த அறிவாற்றல் செயல்பாட்டைப் பராமரிப்பது முக்கியமானது. அறிவாற்றல் ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமான நினைவாற்றல் சக்தி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்பட பல்வேறு வாழ்க்கை முறை மூலம் மேம்படுத்தப்படலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: 5 superfoods for boosting memory power
உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் உணவியல் நிபுணர் ஏக்தா சிங்வால் கருத்துப்படி, மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், நினைவாற்றலை அதிகரிக்க சூப்பர் உணவுகள் முக்கியமானதாக நம்பப்படுகிறது. “இந்த ஊட்டச்சத்துக்கள் சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றன, மேலும் வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கலாம்” என்று அவர் indianexpress.com-ல் ஒரு உரையாடலில் கூறுகிறார்.
மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க முக்கியமான 5 ‘சூப்பர்ஃபுட்கள்’ கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புளு பெர்ரிஸ்: மூளை பெர்ரி
புளு பெர்ரி பழங்கள் பெரும்பாலும் ‘மூளை பெர்ரி’ என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில், அவை ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான உள்ளடக்கம் கொண்டது. இந்த கலவை மேம்பட்ட நினைவவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. புளு பெர்ரி வழக்கமாக சாப்பிட்டால், வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியை தாமதப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது, இது நினைவாற்றலை அதிகரிக்க உங்கள் உணவில் ஒரு சிறந்த கூடுதல் உணவாகும்.
கொழுப்பு நிறைந்த மீன்: ஒமேகா-3 பவர்ஹவுஸ்
சால்மன் மீன், ட்ரவுட் மீன் மற்றும் மத்தி மீன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (DHA) அதிக அளவில் உள்ளன. மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 அமிலம் முக்கியமானவை. குறிப்பாக டி.எச்.ஏ, மூளையின் முக்கிய கட்டமைப்பு கூறு ஆகும். உங்கள் உணவில் கொழுப்பு நிறைந்த மீன்களை சேர்ப்பது அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைக்கும்.
ப்ரோக்கோலி: மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் பச்சை
ப்ரோக்கோலி உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஊட்டச்சத்து சக்தியாக உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் கே நிறைந்த ப்ரோக்கோலி ஆரோக்கியமான மூளை செயல்பாட்டை ஆதரிக்கிறத, நல்ல நினைவாற்றலைத் தக்கவைக்க பங்களிக்கிறது.
ப்ரோக்கோலி வைட்டமின்கள் சி மற்றும் கே-ன் சிறந்த ஆதாரமாக உள்ளது. (ஆதாரம்: ஃப்ரீபிக்) கூடுதலாக, குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் அதன் உயர் அளவு கலவைகள் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுப்பதில் தொடர்புடையதாக உள்ளது. (ஆதாரம்: ஃப்ரீபிக்)
டார்க் சாக்லேட்: ஒரு ஸ்வீட் மெமரி ட்ரீட்
சாக்லேட் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி - டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள், காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உங்கள் மூளைக்கு ஒரு இனிமையான விருந்தாக அமைகிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச நன்மைகளுக்கு குறைந்தபட்சம் 70% கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டைத் தேர்வு செய்யுங்கள்.
மஞ்சள்: நினைவாற்றலுக்கான பொன்னான மசாலா
மஞ்சளில் ஆக்டிவான கூறுகளைக் கொண்டது. குர்குமின், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. குர்குமின் ரத்த-மூளைத் தடையை கடக்க முடியும், அல்சைமர் நோயுடன் தொடர்புடைய பிளேக்குகளின் குவிப்புகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. உங்கள் உணவில் மஞ்சளைச் சேர்ப்பது அல்லது குர்குமின் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.
ஒரு சீரான மற்றும் மாறுபட்ட உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான மனதிற்கு அடித்தளமாக அமைகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.