இட்லி- தோசைக்கும் செம்ம சைட் டிஷ்: சுரைக்காய் கூட்டு செய்முறை

Idli Dosa Best Side Dish: இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் சூப்பரான சைட் டிஷ். இதை மிஸ் பண்ணாதீங்க!

Suraikai Image Source: Pixabay.com

Suraikai Recipe In Tamil, Suraikai KootuTamil Video: சுரைக்காய், நம் வீட்டுத் தோட்டத்தில் விளைய வைக்கத்தக்க எளிய காய்கறி. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் மார்க்கெட்களில் தாராளமாக வாங்க முடியும். 10 அல்லது 15 ரூபாய்க்கு ஒரு சுரைக்காய் வாங்கினால், 4 பேர் வசிக்கிற ஒரு குடும்பத்திற்கு மதிய சாப்பாடுக்கு தேவையான கூட்டு செய்துவிட முடியும்.

சுரைக்காய் மிகச் சத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தைப் பேறு கண்ட பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க, சுரைக்காய் கூட்டு வைத்துக் கொடுப்பார்கள். இதை குழம்பாக வைப்பதைவிட கூட்டாக வைத்து சாப்பிடுவதே டேஸ்டாக இருக்கும்.

சுரைக்காய் கூட்டு எப்படி சமைப்பது என இங்கு பார்க்கலாம்.

Suraikai KootuTamil Video: சுரைக்கார் கூட்டு

சுரைக்காய் கூட்டுக்கு தேவையான பொருட்கள்: சுரைக்காய் – கால் கிலோ, தனியாப் பொடி – 1 1/2 ஸ்பூன், வத்தல் பொடி – முக்கால் ஸ்பூன், சீரகப் பொடி – முக்கால் ஸ்பூன், ம‌ஞ்சள் பொடி – அரை ஸ்பூன், பொரிகடலை – 10 கிராம், உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 2, க‌றிவேப்பிலை – 2 கீற்று, கடுகு – அரை ஸ்பூன்

சுரைக்காய் கூட்டு செய்முறை:

சுரைக்காயின் தோலை சீவிக் கொள்ளவும். பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்குங்கள். சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பொரிகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச் சேர்க்கவும். பின் குக்கரில் தனியாப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

சுரைக்காய் கலவையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும், குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும். குக்கரில் விசில் வந்ததும், சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து விடுங்கள். குக்கரின் நீராவி அடங்கியதும் குக்கரை திறக்கலாம்.

குக்கரை திறந்த பின்பு, பொடித்துள்ள பொரிகடலையை சுரைக்காய் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதில் பொரிகடலை இல்லாமலும் செய்யலாம்.

சுரைக்காய் கூட்டு சாதத்திற்கு மட்டுமல்ல… இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் சூப்பரான சைட் டிஷ். இதை மிஸ் பண்ணாதீங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suraikai recipe in tamil idli dosa best side dish suraikai kootu tamil video

Next Story
குழந்தைகளுக்கு பிடித்த கேரட்- முட்டை பொரியல் : எப்படி செய்வது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com