இப்படி சுரைக்காய் வைத்து குழம்பு செய்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. செம்ம ருசியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
மொஞ்சம் வெந்தயம்
கடுகு
உளுந்து
2 பெரிய வெங்காயம்
கருவேப்பிலை
5 பூண்டு
சுரைக்காய் – 1
3 தக்காளி-
உப்பு தேவையான அளவு
செய்முறை : சுரைக்காய்யை நறுக்கி சுத்தப்படுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம், கடுகு சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து இதில் பூண்டு சேர்க்கவும். நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து சுரைக்காய்யை இதில் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் மல்லித் தூள், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வேக வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“