இளைஞர்கள், இளைஞிகள் தனியாக பயணம் மேற்கொள்ள விரும்பும் இடமாக ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் மணாலி உள்ளிட்ட இடங்கள் திகழ்கின்றன என்று சமீபத்திய பயண அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னணி டிராவல் ஃபின்டெக் சான்காஷ் நடத்திய இந்த ஆய்வில், “சுமார் 35 சதவீதம் தனிமைவிரும்பி தனிநபர்கள் இந்த இடங்களை தேர்வு செய்கிறார்களாம்.
தொடர்ந்து முசோரியை 9 சதவீதம் பேரும், சிக்கிம், கோவா முறையே 7 மற்றும் 5 சதவீதம் பேர் தேர்வு செய்கிறார்கள். இந்த இடங்கள் இயற்கை வனப்புக்கு பெயர் பெற்ற இடங்களாகும்.
மேலும் உள்நாட்டில் இருப்பதால் பெரும்பாலானோர் இந்த இடங்களை சுற்றுலாவுக்கு தேர்வு செய்கின்றனர். இங்குள்ள மலைகள் மற்றும் கடற்கரையில் சாசக ட்ரிப் செல்லவும் விரும்புகின்றனர்.
எனினும் இந்த இடங்களில் தொற்றுநோய் தாக்கத்தின்போது சுற்றுலா பெரிதளவு பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இயல்புநிலை திரும்பியதால் சுற்றுலா விகிதம் 250 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில், “சுதந்திரம் மற்றும் சுதந்திர உணர்வு ஆகியவை சுற்றுலாப் போக்கைத் தூண்டும் முக்கிய காரணிகளாகும்.
ஏனெனில் மக்கள் தங்கள் அழுத்த மனநிலையில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். இதற்காக இதுபோனற பயணங்களை அவர்கள் விரும்புகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“