தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா எனப் பொங்கல் பண்டிகை அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.
தமிழ் சூரிய நாட்காட்டியின்படி, தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது மற்றும் பண்டிகை சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிய பயணமான உத்தராயணத்தின் தொடக்கத்தையும் இது குறிக்கிறது. விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சூரிய பொங்கல் வழிபாட்டு நடைமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
பொங்கல் வைப்பதற்கு முன் பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் செம்மண் கொண்டு பாத்தி கட்டுவது போல் ஓரங்களில் வீடு கட்ட வேண்டும். சிறிய வாசல் ஏற்படுத்தவும்.
அடுத்து செம்மண் வீட்டில் கோலமிட வேண்டும். வண்ண கோலம் போடலாம். விநாயகர் பிடித்து விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கலாம். வீட்டின் இரு பக்கமும் கரும்பு வைக்கலாம். சூரியனுக்கு படையலிட மண்ணில் விளைந்த காய்கறிகள் பூசணி, சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழைப்பழம், உருளைக் கிழங்கு, அவரைக்காய், சேப்பங் கிழங்கை வைக்கலாம். ஒரு தட்டு அல்லது இலையில் வைத்து படையலிடலாம். அருகில் மஞ்சள் கொத்து வைக்கவும். விளக்கு ஏற்றவும். விநாயகரை வழிபட்டு பொங்கல் வைக்கவும்.
இப்போது பொங்கல் வைத்த பின் பொங்கலை விநாயகரின் முன் வைத்து பூஜை செய்து பொங்கல் சாப்பிடவும். இது முற்காலத்தில் பின்பற்றி வந்த நடைமுறையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“