ஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் பெண்மனி

உன்னுடைய குழந்தையை பெற்று யாரிடமோ தருகிறாயே?

கனடாவை சேர்ந்த மரிசா என்ற பெண், குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு இலவசமாக குழந்தை பெற்று தரும் சேவையை செய்து அனைவரையும் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்கிறார்.

பிரசவம்.. ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். உங்களுக்கு தெரியுமா குறைந்தபட்சம் ஒரு பெண் தனது மகப்பேறு காலத்தில் 16 மணி நேரம் பிரசவ வலியை அனுப்பவிக்கிறார். இத்தனை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தனது குழந்தையின் முகத்தை பார்த்தால் போது அத்தனை வலியையும் மாயமாகிவிடும்.

அதுவும் 9 மாத தவிப்புக்கு பிறகு, தாயானவள் தனது குழந்தையை பார்த்த பின்பு அவள் அடையும் ஆனந்ததிற்கு அளவே இருக்காது. இதனால் தான் எல்லா நாடுகளிலும் தாயின் உறவு மகத்தானதாக பார்க்கப்படுகிறது. போற்றதலுக்கு உரியதாக இருக்கிறது.ஆனால் மரிசாவின் வாழ்க்கையில் இது அப்படியே தலைக்கீழ்.

குழந்தை பிறக்கும் வரை மட்டுமே அவருக்கு அந்த குழந்தை மீது உரிமை உண்டு. அடுத்த சில நொடிகளிலியே பெற்றோரிடம் அந்த குழந்தை சென்றுவிடும். பெற்றோரிடம்மா என்று யோசிக்காதீர்கள்… மரிசா வெறும் வாடகை தாய் மட்டுமே. அதுவும் பணத்தை பெற்றுக் கொண்டு வாடகை தாயாக இருப்பவர் அல்ல குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு இலவசமாக குழந்தையை பெற்று தருகிறார்.

இதுக்குறித்து நெகிழ்ச்சியுடன் மரிசா கூறியது, “நான் குழந்தையை மட்டும் பெற்றுதரவில்லை ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன். இந்த மனநிறைவுக்கு வேறு எதுவும் ஈடாகாது. உன்னுடைய குழந்தையை பெற்று யாரிடமோ தருகிறாயே? என பலரும் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அது என் குழந்தை இல்லை. கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.
கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது.

அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 – 1,20 ,000 டாலர் பணம் பெறுவார்கள் . கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லையே” என புன்னகைத்தபடி சொல்கிறார் மரிசா.

மரிசாவின் இந்த சேவையை கண்டிப்பாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close