விழாத நாள்கள் இல்ல, அடிப்படாத இடங்கள் இல்லை - யார் இந்த சர்வைவர் போட்டியாளர் 'பெசன்ட் ரவி'
Survivor Contestant Beasant Ravi Biography Tamil News புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு மற்றும் சந்தானம் உடனும் பல நகைச்சுவை காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
Survivor Contestant Beasant Ravi Biography Tamil News புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு மற்றும் சந்தானம் உடனும் பல நகைச்சுவை காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
Survivor Contestant Beasant Ravi Biography Tamil News
Survivor Contestant Beasant Ravi Biography Tamil News : குறைந்தது நூறு திரைப்படங்களில், வேகமாக ஓடும் ரயில்களின் மேலேயும், கரடு முரடான பாறைகள் மற்றும் உயரமான கட்டடத்தின் மேலிருந்தும் கீழே குதித்திருப்பார் ‘பெசன்ட்’ ரவி . இதுபோன்ற ரிஸ்க் பலவற்றை ஏற்கெனவே எடுத்தவருக்கு, நிச்சயம் சர்வைவர் நிகழ்ச்சி மற்றுமொரு சவாலான விஷயமாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் ஸ்டன்ட் கலைஞராக இருந்தவர், பிறகு நடிகராகவும் திரைப்படங்களில் தோன்றினார். இவை தெரிந்த விஷயங்கள் என்றாலும், பெசன்ட் ரவியைப் பற்றித் தெரியாத பலவற்றை இனி பார்க்கலாம்.
Advertisment
ஆரம்பக் கால வாழ்க்கை
சென்னையில் பிறந்து வளர்ந்த பெசன்ட் ரவி, தன் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் பைக் மெக்கானிக்காக இருந்தார். அவருடைய குழந்தைப் பருவத்தில் பெசன்ட் நகரில் உள்ள அவருடைய வீட்டின் அருகே திரைப்பட படப்பிடிப்புகளைப் பார்த்து வளர்ந்தவர். அப்போது, அங்குப் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நன்கு பழகினார். தற்காப்புக் கலை மற்றும் குத்துச்சண்டையில் நிபுணத்துவம் பெற்ற பெசன்ட் ரவி, சினிமாவில் லக்கி மேன் படம் மூலம் தடம் பதித்தார்.
Advertisment
Advertisements
திரைப்பயணம்
திரைப்பட படப்பிடிப்புகளின் அமைதியான பார்வையாளராக இருந்தது முதல் வில்லன் வேடங்களில் நடிக்கும் நடிகர் வரை, ‘பெசன்ட்’ ரவி ஏராளமான துன்பங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடந்து வந்துள்ளார். அவருடைய ஆரம்பக் கால திரைப்பயணத்தில், தினசரி காயங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தன. பிறகு, தன்னை காயப்படுத்திக்கொள்ளாமல் சண்டைக் காட்சிகளில் எப்படி நடிக்கலாம் என்பதைக் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சக நடிகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியதற்காக திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
‘சொக்கத் தங்கம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ மற்றும் சமீபகாலமாக, ‘சிங்கம்’ மற்றும் ‘பென் சிங்கம்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு அவருடைய நடிப்புத் திறனைக் காண்பிக்க உதவியது. சண்டை பயிற்சியாளர்களுக்குக் காப்பீடு மற்றும் படப்பிடிப்பின் போது விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில், ஸ்டண்ட் யூனியன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது இவருக்கான பெரும் ஆறுதலாக இருக்கிறது.
ஸ்டன்ட் மற்றும் ஆக்ஷனில் வெற்றி பெற்ற ரவி, நடிப்பிலும் நல்ல வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார். மேலும், தமிழில் மட்டுமல்லாமல், அனைத்து தென்னிந்திய மொழிகள், பெங்காலி, பாலிவுட் வரை சென்று தன் திறமையை வளர்த்துக்கொண்டார். நடிப்பில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு மற்றும் சந்தானம் உடனும் பல நகைச்சுவை காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
26 வருட திரைத்துறை மற்றும் 15 வருட ஹோட்டல் தொழிலில் ஏராளமான போராட்டங்களை சந்தித்தவர், தன்னுடைய வாழ்க்கை பயணமே சர்வைவர்கான போராட்டம்தான் என்கிற தன்னம்பிக்கையோடு இருக்கிறார். "ஏற்கெனவே ஏராளமான கஷ்டங்கள், சந்தோஷங்கள் பார்த்தாச்சு, இந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் அப்படி என்னதான் நடக்கப்போகிறது என்பதையும் பார்ப்போமே" என்றுகூறி ஜி தமிழின் சர்வைவர் நிகழ்ச்சிக்குச் செல்ல தயாராகிவிட்டார் பெசன்ட் ரவி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil