தயாரிப்பாளர், யூடியூபர், டான்சர் – சர்வைவர் போட்டியாளர் விஜயலட்சுமி பற்றி அறியாத விஷயங்கள்!

Survivor Contestant Vijayalakshmi Ahathian Youtube Channel Tamil News ஃபெரோஸ் இயக்கிய ‘பண்டிகை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.

Survivor Contestant Vijayalakshmi Ahathian Youtube Channel Tamil News
Survivor Contestant Vijayalakshmi Ahathian Youtube Channel Tamil News

Survivor Contestant Vijayalakshmi Ahathian Youtube Channel Tamil News : பிரபலமான பிக் பாஸ் ஷோவிற்கு இணையாக விரைவில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 100 நாள்கள் வெவ்வேறு சாகசங்கள் செய்து, இறுதியில் யார் வெற்றி பெறுகிறார் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். வருகிற செப்டம்பர் 12 முதல் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ள இந்த நிகழ்ச்சியில் விஜயலட்சுமி அகத்தியனும் கலந்துகொள்ள இருக்கிறார். ஜிம் முதல் அழகு குறிப்புகள் வரை விஜயலக்ஷ்மி பற்றிய சில சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாமா..

குடும்பம்

90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படமான ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள்தான் விஜயலக்ஷ்மி. குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் டைட்டில் வின்னர் கனி, விஜியின் அக்கா மற்றும் ஆடை வடிவமைப்பாளரும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்’ திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்தவருமான நிரஞ்சனி, இவருடைய தங்கை.

2015-ம் ஆண்டு தன்னுடைய நீண்டகால பள்ளி நண்பனான ஃபெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜயலட்சுமி. இவர்களுக்கு நிலான் என்ற கியூட் மகன் இருக்கிறார். தன் குடும்பத்தின் மீது அதீத அன்பு வைத்துள்ள இவர், அவர்களின் சந்தோஷத் தருணத்தை சமூக வலைத்தளங்கள் வழியே மக்களோடும் பகிர்ந்துகொள்வார்.

திரைப்பயணம்

விஜயலட்சுமி பன்முக திறமையாளர். அஞ்சாதே, சென்னை 28 என இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் ஹிட் அடித்த நிலையில், இவரை ‘அதிர்ஷ்டமான நடிகை’ எனப் புகழ்ந்தனர். மேலும், இவர் நடிகை மட்டுமல்ல, தன் கணவர் ஃபெரோஸ் இயக்கிய ‘பண்டிகை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னதிரை ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி உள்ளார். பிக் பாஸ் மற்றும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் கலக்குவார் விஜி. மேலும், விதவிதமாக சமைப்பதிலும் கில்லாடி. மேலும், அவர் ஒரு ஃபிட்னஸ் பிரீக். தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். கொரோனா லாக்டவுனினால் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டபோதும், அவர் வீட்டிலேயே தன்னுடைய பயிற்சியைத் தொடர்ந்தார். மேலும், தனிப்பட்ட வகையில் ஜிம் ஆரம்பித்தும் இருக்கிறார் விஜி. அதுமட்டுமின்றி, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதிலும் ஏராளமான காணொளிகளை அப்டெட் செய்து, ட்ரெண்டிங்கிலும் அவ்வப்போது வருவதுண்டு.

ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கிய விஜி, சர்வைவர் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் செய்யவிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு, மக்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். மேலும், இவருடைய கணவர் முதல் குடும்பத்தினர் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியையும் பெருமையையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Survivor contestant vijayalakshmi ahathian youtube channel tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com