surya jyothika : தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகள் என்றால் சூர்யா- ஜோதிகா, மும்பை பொண்ணான ஜோதிகா சூர்யாவைக் காதலித்தார். சூர்யா குடும்பத்தில் சம்மதம் கிடைக்காத நிலையில், பெற்றோர் சம்மதத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா அப்படியே அம்மாவையும், தேவ் அப்படியே அப்பாவையும் உரித்து வைத்ததுபோல் இருப்பார்கள்.
இன்றும் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது குடும்பத்துடன் தங்களது தாய் தந்தையுடன் தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
சூர்யா’ என்ற மூன்றெழுத்தும் `ஜோதிகா’ என்ற மூன்றெழுத்தும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கின்றனர் என்றால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள். எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்று நடிகர், தயாரிப்பாளர், சிறந்த கணவர், பேர் சொல்லும் மகன் என ஜொலித்து கொண்டிருக்கிறார் சூர்யா.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/4d9332e8ee57419f2d62facdc1a22217-30.jpg)
சூர்யாவின் இந்த வெற்றிக்கு அவரின் கடின உழைப்பு, விடாமுயற்சி காரணம் என்றாலும், ஜோதிகா இல்லாமல் இது சாத்தியமா? என்றால் அதை சூர்யாவே மறுக்க மாட்டார். காரணம், சூர்யா- ஜோதிகா இந்த ஜோடிகளுக்காகவே படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏராளம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/4d9332e8ee57419f2d62facdc1a22217-31.jpg)
தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் படத்தை ரிலீஸ் செய்ய டைரக்டர்கள் வரிசை கட்டி நின்ற காலம் அது. தயாரிப்பாளர்களும் சூர்யா- ஜோதிகாவை புக் செய்ய அதிகம் மெனக்கெடுத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/4d9332e8ee57419f2d62facdc1a22217-32-1024x576.jpg)
இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க,பேரழகன்,மாயாவி,ஜூன் R, சில்லுனு ஒரு காதல் என மொத்தம் 7 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக காக்கா காக்கா படத்திற்கு பிறகு தான் இருவரும் மிகவும் நெருக்கமானர்கள். ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கணவன் – மனைவி ரோல்.சொல்லி வைத்தது போல் அதே ஆண்டு இருவருக்கும் பிரம்மாண்டமாக, ரசிகர்களின் பேராதரவுடன் திருமணம் அரங்கேறியது.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/0a5e7dfdc70bb11a9c42d3b124d100b2-4-1024x768.jpg)
ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சூர்யா கல்வி சேவை, சமூக சேவை என தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். ம்னைவி ஜோவுக்கு மிகச் சிறந்த கணவர், வெல்விஷர், முன்னோடி, காதலன், நண்பன் என சூர்யா எடுக்கும் பரிமாணங்கள் பல. மகனாக தனது தாய் -தந்தைக்கு செல்ல பிள்ளை. சூர்யாவும் சரி, அவரின் தம்பி கார்த்தியும் சரி தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ் இதுதான். “உங்களை பெற்று வளர்த்த தாய் தந்தையினரை’ ஒருபோதும் மறக்காதீர்கள் என்பது தான்.
சினிமா உலகில், சிவக்குமார் குடும்பத்தை கண்டு பொறாமை படாதவர்களே இல்லை எனலாம். ஒற்றுமை தான் இவர்கள் பலம். காதல் தாம் சூர்யா-ஜோவின் பலம். இந்த மேஜிக் தான் இன்னும் இவர்களை ரசிக்க வைக்கிறது.