Advertisment

ஸ்வானா பிராணாயமா: உங்க நுரையீரலில் இருந்து பழைய காற்றை இப்படி சுத்தம் பண்ணுங்க

குறிப்பாக நாம் சுவாசிக்கும் காற்று தரமற்றதாகவும் மாசுபட்டதாகவும் இருக்கும் போது, அதை எப்படி செய்வது என்று கன்டென்ட் கிரியேட்டர் ஆதித்யா நடராஜ் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Swana Pranayama

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையான வழிகளைத் தேடும் நோயாளிகளை மருத்துவ வல்லுநர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். இது போன்ற ஆலோசனைகளின் போது அடிக்கடி வரும் ஒரு நுட்பம் ஸ்வானா பிராணாயாமம் ஆகும்.

Advertisment

இது நுரையீரலில் இருந்து பழைய காற்றை சுத்தப்படுத்துவதாக நம்பப்படும் ஒரு யோக சுவாசப் பயிற்சி, என்று டாக்டர் அருண் கோட்டாரு கூறினார். (consultant, respiratory/pulmonology and sleep medicine, Artemis Hospitals, Gurugram)

குறிப்பாக நாம் சுவாசிக்கும் காற்று தரமற்றதாகவும் மாசுபட்டதாகவும் இருக்கும் போது, அதை எப்படி செய்வது என்று கன்டென்ட் கிரியேட்டர் ஆதித்யா நடராஜ் பகிர்ந்துள்ளார். 

நமது நுரையீரல் வாயு பரிமாற்றத்திற்கு பொறுப்பான முக்கிய உறுப்புகள்.  அவை உள்ளிழுக்கும் மூச்சில் இருந்து ஆக்சிஜனை எடுத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. அல்வியோலி (alveoli) எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய காற்றுப் பைகள் இந்த பரிமாற்றம் திறமையாக நிகழ ஒரு பரந்த பரப்பளவை வழங்குகிறது.

இருப்பினும், நுரையீரல் தொடர்ந்து மாசு, ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டும் பொருட்களுக்கு வெளிப்படும், அவை காற்றுப்பாதைகள் மற்றும் அல்வியோலியில் சிக்கிக் கொள்ளக்கூடும், என்று டாக்டர் கோட்டாரு கூறினார்.

பழைய காற்று என்றால் என்ன?

நம் உடலில் இந்த எரிச்சலை அகற்ற இயற்கையான வழிமுறைகள் இருந்தாலும், சில நேரங்களில் "பழைய காற்று" என்பது சாதாரண சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் எஞ்சியிருக்கும் காற்றின் அளவைக் குறிக்கலாம். "புதிய காற்றுடன் ஒப்பிடும்போது இந்த காற்றில் குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு இருக்கலாம்" என்று டாக்டர் கோட்டாரு கூறினார். 

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் உதவும்

மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை அவற்றின் முழு திறனுக்கு விரிவுபடுத்துவதன் மூலம், ஸ்வானா பிராணயாமா சுவாச தசைகளை நீட்டவும் வலுப்படுத்தவும் உதவுகிறது, இது நுரையீரலின் அளவை அதிகரிக்கக்கூடும்.

ஸ்வானா பிராணயாமாவுடன் தொடர்புடைய ஆழமான சுவாசங்கள், காற்றுப்பாதைகளில் உள்ள தூசி துகள்கள் மற்றும் ஒவ்வாமைகளை சிக்க வைக்கும் சளியை திரட்டவும் வெளியேற்றவும் உதவும்.

ஸ்வானா பிராணயாமா போன்ற ஆழமான சுவாச நுட்பங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகின்றன, தளர்வை ஊக்குவிக்கின்றன மற்றும் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கின்றன. மன அழுத்தம் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை அதிகப்படுத்தும், எனவே இந்த தளர்வு நுட்பம், நன்மை பயக்கும்.

lungs

ஸ்வானா பிராணயாமா பயனுள்ளதாக இருக்குமா?

இந்த வலிமையான சுவாசம் நுரையீரலில் இருந்து பழைய காற்றை வெளியேற்ற உதவுகிறது, ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை மேம்படுத்துகிறது, என்று டாக்டர் கோட்டாரு கூறினார்.

யோகா குரு டாக்டர் மிக்கி மேத்தாவின் கூற்றுப்படி, ஸ்வானா பிராணயாமா அல்லது நாய் சுவாசத்தின் நன்மைகள்

வலுவாக மூச்சை வெளியே விடுவது நுரையீரலில் நச்சுத்தன்மை மற்றும் எஞ்சிய கார்பன் டை ஆக்சைடை விடுவிக்கின்றன, இது புதிய ஆக்ஸிஜனை நுழைய அனுமதிக்கிறது. இதை தொடர்ந்து செய்வது நுரையீரல் திறனை பலப்படுத்துகிறது.

இது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவிலிருந்து விடுபடுவதோடு, பொதுவான சுவாச செயல்திறனை மேம்படுத்துகிறது.

இந்த பிராணயாமா நுட்பம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் மனத் தெளிவு மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கிறது, என்று டாக்டர் மேத்தா கூறினார்.

ஆழ்ந்த சுவாசம் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது, இது உடலையும் மனதையும் உற்சாகப்படுத்துகிறது மற்றும் உங்களுக்கு இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இது வீரியத்தை மேம்படுத்தும் மற்றும் சோர்வை எதிர்த்துப் போராடும்.

ஸ்வானா பிராணயாமா பற்றிய ஆராய்ச்சி குறைவாக இருந்தாலும், சில சுவாச நுட்பங்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஸ்வானா பிராணயாமா என்பது சுவாசக் கோளாறுகளுக்கான வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உங்களுக்கு ஏதேனும் அடிப்படை நுரையீரல் பிரச்சினைகள் இருந்தால், இந்த நடைமுறையை முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுக, டாக்டர் கோட்டாரு அறிவுறுத்தினார்.

Read in English: Experts decode this yogic breathing practice believed to help remove ‘stale air’ from the lungs

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment