விலையை கேட்டு ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு! ஸ்வர்ணமால்யா போட்டிருக்கிற கம்மல்’ல அப்படி என்ன ஸ்பெஷல்?

அங்க பில் போட்டப்போதான் ஷாக்! ஒரு பயங்கரமான விலை... நாங்க எதிர்பார்க்கவே இல்லை! நம்பவே முடியல, பக்கத்துல இன்னொரு ஜீரோ எக்ஸ்ட்ரா போட்ட மாதிரி இருந்துச்சு. நிஜமாவே, ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு!

அங்க பில் போட்டப்போதான் ஷாக்! ஒரு பயங்கரமான விலை... நாங்க எதிர்பார்க்கவே இல்லை! நம்பவே முடியல, பக்கத்துல இன்னொரு ஜீரோ எக்ஸ்ட்ரா போட்ட மாதிரி இருந்துச்சு. நிஜமாவே, ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு!

author-image
WebDesk
New Update
Swarnamalya

Actress Swarnamalya

திரையுலகில் தன் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. நடிப்பைத் தாண்டி, அவர் அணிந்து கொள்ளும் ஆபரணங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் அவர் மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஜூவல்லரி கலெக்ஷன் பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

நான் போட்டிருக்கிறது ஒரு சில்வர் கம்மல். இதுல அமெதிஸ்ட் மற்றும் பெரிடாட்னு சொல்லக்கூடிய ரெண்டு செமி பிரஷியஸ் கற்கள் பதிச்சிருக்காங்க. இதை வாங்குனப்போ நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் மறக்க முடியல. நானும் என் தங்கையும் கடைக்கு போய், இந்த கம்மல் ரொம்ப அழகா இருக்குன்னு ஆசைப்பட்டு வாங்கிட்டோம்.

அங்க பில் போட்டப்போதான் ஷாக்! ஒரு பயங்கரமான விலை... நாங்க எதிர்பார்க்கவே இல்லை! நம்பவே முடியல, பக்கத்துல இன்னொரு ஜீரோ எக்ஸ்ட்ரா போட்ட மாதிரி இருந்துச்சு. நிஜமாவே, ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு! இருந்தாலும், இவ்வளவு தூரம் ஆசப்பட்டு பில்லிங் கவுண்டர் வரைக்கும் வந்தாச்சு, இனிமே வேண்டாம்னு எப்படி சொல்றதுன்னு ஒரு தயக்கம். 'திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி'ன்னு சொல்லுவாங்க இல்லையா, அதே மாதிரி தயங்கி தயங்கி அந்த விலையை கொடுத்து வாங்கிட்டேன்.

Advertisment
Advertisements

ஆனா, ஒண்ணு சொல்லணும்... இதை நான் வாங்கினதுல இருந்து பல நிகழ்ச்சிகளுக்கு போட்டிருக்கேன். போட்ட எல்லா இடத்துலயும் நிறைய நல்ல காம்ப்ளிமெண்ட்ஸ் கிடைக்குது. அதனால, இவ்வளவு விலை கொடுத்து வாங்கினது ஒரு நல்ல முடிவுதான்னு இப்போ வரைக்கும் நான் நினைச்சுட்டு இருக்கேன்.

Swarnamalya 1

அடுத்து, என் கலெக்‌ஷன்ல ரொம்ப ஸ்பெஷலான ஒரு நகை... இந்த கங்கணம். இதுவும் சில்வர்ல பண்ணதுதான். இது குஜராத்ல இருக்குற பழங்குடி மக்கள் பயன்படுத்துற ஒரு கங்கணம். அவங்க கிட்டதான் நான் இதை வாங்கினேன். அவங்ககிட்ட நான் இதை பார்த்துட்டு, "எவ்வளவு அழகா இருக்கு!"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, "இதெல்லாம் நாங்க விற்கிறோம். இது சில்வர் தானே, சில்வருக்குண்டான விலை மட்டும் கொடுத்தா போதும், நீங்க எடுத்துக்கோங்க"ன்னு சொன்னாங்க.

அவங்களுடைய கலாசாரத்துல இதோட மதிப்பு கணக்கிட முடியாதது. ஆனா, அவங்க சில்வரோட விலை மட்டும்தான் கேட்டாங்க. அவ்வளவு அன்பான மக்கள் அவங்க! அவங்ககிட்ட இருந்து நேரடியா வாங்கினதால, இந்த கங்கணம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: