கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பம் எண்ணெய் பிடிக்காமல், நல்ல மிருதுவாக எப்படி செய்வது என்பதை பாருங்கள்
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
உருட்டு உளுந்து பருப்பு- அரை டேபிள்ஸ்பூன்
Advertisment
Advertisement
துவரம் பருப்பு- 1 டீஸ்பூன்
வாழைப்பழம்- 1
துருவிய தேங்காய்- அரை காப்
வெல்லம்- 1 கப்
செய்யமுறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் வெல்லம் போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும். பாகு காய்ச்ச கூடாது. வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும்.
பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி அதை மிக்சி ஜாடியில் போடவும். அதில் கால் கப் ஊறவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த வைத்த மாவில் நன்கு கனிந்த வாழைப்பழம் 2 சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன ஏலக்காய் பொடி, துருவின தேங்காய் அரை கப் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும்.
மாவில் வடிகட்டியை பயன்படுத்தி, கரைத்து வைத்த வெல்லம் சேர்க்கவும். மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று அடிக்கவும்.
மாவை மிக்சி ஜாரில் இருந்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றவும். இந்த மாவை குறைந்தது 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெய்யில் அப்படியே விடவும். அடுப்பை மீடியம் தீயில் வைக்கவும். அப்பம் எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு வெந்த பிறகு எடுக்கவும்.
சுவையான கார்த்திகை அப்பம் ரெடி.
உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Gomathi’s Kitchen யூடியூப் வீடியோவை பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“