சுவையான ஸ்வீட் கார்ன் கொழுக்கட்டை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொழுக் கட்டை மாவு – 1 கப்
ஸ்வீட் கார்ன் – 2
பொடித்த வெல்லம் – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலத்தூள் – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஸ்வீட் கார்ன் எடுத்து அதை குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்து உதிர்த்து தனியாக வைக்கவும். இப்போது உதிர்த்த ஸ்வீட் கார்னை பாத்திரத்தில் போட்டு வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அதை மீண்டும் பாத்திரத்தில் போட்டு ஏலத்தூள், நெய் சேர்த்து கெட்டியாக பூரணம் கிளறவும்.
பச்சரிசி மாவு எடுத்து அதில் பூரணத்தை சிறு உருண்டையாகப் பிடித்து உள்ளே வைக்கவும். இப்போது இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் கொழுக்கட்டை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“