ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான காலை உணவு பழக்கவழக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. சிலர் காலை உணவை இனிப்புடன் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். காலை உணவாக இனிப்பு வகைகளை தேர்ந்தெடுப்பது நமது ஆற்றல் மட்டுமல்லாமல், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
“காலை உணவை இனிப்பாக எடுத்துக் கொள்வது உடனடியாக ஆற்றல் அளிப்பது போன்று தோன்றலாம். ஆனால், அவை சோர்வாகவும் மேலும் உணவு தேவைப்படுவது போன்றும் ஏங்க வைக்கும்“ என ஊட்டச்சத்து நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sweet or savoury breakfast: Which is better for you and why?
இதனால் தான் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்புகள் நிறைந்த உணவை காலை நேரத்தில் சாப்பிட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவி செய்கிறது.
மேலும், நீண்ட நாள்களுக்கு இனிப்பு நிறைந்த காலை உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இவை உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இருதய கோளாறு, இரத்த அழுத்தம், மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
எனினும், ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பான உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு நன்மை தரும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக, புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட இனிப்பான காலை உணவுகளை சாப்பிடலாம். பழங்களால் செய்யப்பட்ட ஸ்மூத்தி போன்றவை ஆரோக்கியமாக இருக்கும் என மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஊட்டச்சத்துகள் மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடுவது மிக அவசியம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“