சுவையான இனிப்பு பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
மைதா- 100 கிராம்
அரிசி மாவு-200 கிராம்
வெள்ளம் 200- கிராம்
ஏலக்காய் தூள்- அரை டீஸ்பூன்
நெய்- தேவையான அளவு
உப்பு- 1 டீ ஸ்பூன்
சமையல் சோடா- அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து 200 கிராம் வெள்ளத்தை போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை உருக வைக்கவும். வெள்ளம் உருகிய பிறகு அதை வடிகட்டவும். பின்னர் இந்த வெல்லபாகுவை தனியாக வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இதில் வெல்லபாகுவை ஊற்றி கலக்கவும். அடுத்து இந்த கலவைகளை நன்கு
பிசையவும். இட்லி மாவு பதத்திற்கு பிசையவும். இப்போது அரிசி மாவின் கடினத்தன்மையை குறைக்க
அரை ஸ்பூன் சமையல் சோடா சேர்க்கவும்.
அடுத்தாக அடுப்பில் பணியாரக் கல் அதில் நெய் ஊற்றவும். நெய் சூடான பிறகு செய்து வைத்த மாவை ஊற்றவும். இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான, டேஸ்டியான இனிப்பு பணியாரம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“