சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மட்டன் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 200 மிலி
கான்பிளவர் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 5 டீஸ்பூன்
செய்முறை
முதலில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை தண்ணீரில் கழுவி, அதை நறுக்கி இட்லித் தட்டில் போட்டு, அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி, 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
அடுத்து அது வெந்தபின் தோல் நீக்கி அதை பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், மட்டன் மசாலா, கார்ன்பிளவர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும். பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான கட்லெட் ரெடி.