இந்த கீர் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் செய்தது என்று நம்ப மாட்டீங்க. செம்ம சுவையான ரெசிபி
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் நெய்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு துருவியது ஒரு கப்
2 கப் பால்
50 கிராம் சர்க்கரை
குங்குமப் பூ
ஏலக்காய் பொடி ¼ டேபிள் ஸ்பூன்
பாதாம் நறுக்கியது
பிஸ்தா நறுக்கியது
முந்திரி நறுக்கியது
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். சர்க்கரை வள்ளிகிழங்கை தோல் நீக்கித் துருவிகொள்ளவும். இதை நெய்யில் சேர்த்து கிளரவும். 6 நிமிடங்கள் கிளரவும். தொடர்ந்து நிறம் மாறியதும், அதில் பாலை சேர்க்கவும். இதை குறைந்த தீயில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேக வைக்கவும். 12 நிமிடங்கள் கழித்து, குங்குமப் பூ சேர்க்கவும். தொடர்ந்து சர்க்கரை சேர்க்கவும். இது கரைந்ததும், குங்குமப் பூ சேர்க்கவும். தொடர்ந்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து நட்ஸ் சேர்த்து கிளரவும். சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் சேர்க்கவும்.