சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சுவையான வடை எப்படி செய்வது? செஃப் வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் ரெசிபி இதோ
Advertisment
இதை செய்வதற்கு 30 நிமிடங்கள் போதும்
எப்படி செய்வது?
முதலில் கடலை பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
தோல் உரித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ளவும். இதில் சோம்பு, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி தழை, வடை மாவுக்கு தேவையான உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
ஊறவைத்த கடலைப் பருப்பில் ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து தனியாக வேறொரு கிண்ணத்தில் வைத்து, மீதமுள்ள கடலைப் பருப்பை வடை மசாலாவில் சேர்க்கவும்.
எடுத்து வைத்த கடலை பருப்பில் 6,7 காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கடலைப் பருப்பையும் வடை மசாலாவில் சேர்க்கவும். இதில் 2 பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் தண்ணீரை போதும்.
இப்போது கையை லேசாக நனைத்துக் கொண்டு கொஞ்சமாக வடை மாவு எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இறுக்கமாக பிடித்து வைக்கவும். இல்லையென்றால் எண்ணெய்யில் விடும் போது பிரிந்துவிடும்.
அடுப்பில் கடாய் வைத்து கடலை எண்ணெய் விடவும். எண்ணெய் மீடியம் சூடாக இருக்கும் போது, உருட்டி வைத்திருந்த வடையை எடுத்து, இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து லேசாக அமுக்கி மெதுவாக எண்ணெய்யில் விடவும்.
மீடியம் ஃபிளேமில் 5 முதல் 7 நிமிடங்கள் சமைத்து, டார்க் பிரவுன் நிறமாக வந்ததும் எடுக்கவும்.
சுவையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு வடை தயார்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“