தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
தேங்காய் - 1 கப்
சர்க்கரை – முக்கால் கப்
உப்பு – கால் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
நெய் – அரை கப்
முந்திரி பருப்பு – தேவையான அளவு
உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துவிடவேண்டும். மறுபுறம் ஒரு கடாயில் நெய் சேர்த்து, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஊறிய ரவையில் முக்கால் கப் சர்க்கரை, வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பணியார மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் பணியார கல் வைத்து சூடானதும் நெய் சேர்த்து தயாரித்து வைத்துள்ள மாவு ஊற்றவும்.
இருபுறமும் பொன்னிறமாக வெந்து வந்த உடன் அதை எடுக்கலாம். அவ்வளவு தான் சுவையான இனிப்பு ரவை பணியாரம் ரெடி.