உழவுக்கும், இயற்கைக்கும் தலைவணங்கி நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளன்று சுவையான சக்கரை பொங்கல், செய்து குடும்பத்துடன் உண்போம். அதுவும், சமையல் நிபுணர் கமலேஷ் ராவத் வழங்கும் இந்த சிறப்பு சர்க்கரை பொங்கலை செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
பாசி பருப்பு - கால் கப்
பால் - 4 கப்
வெல்லம் - ஒரு கப்
முந்திரி - 3 மேசை கரண்டி
உலர்ந்த திராட்சை - 3 மேசை கரண்டி
ஏலக்காய் - 5
நெய் - கால் கப்
தேங்காய் - அரை கப்
செய்முறை:
- அரிசியை இரண்டு மணிநேரத்திற்கு ஊற வையுங்கள். பின்னர், பாசிபருப்பு, அரிசி நெய் சேர்த்து 25 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்
- கவனமாக கிளறி, மிதமான அடுப்பில் வேக வைப்பது அவசியம். அதன்பின், வெல்லத்தை சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து கிளறுங்கள்.
- அதன்பின்பு, மற்றொரு வானலியில் நெய் ஊற்றி, அதில் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாலிக்கவும்.
- அதன்பின்பு, பொங்கலில் தாலித்த கலவையை கொட்டி கிளறினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.