By: WebDesk
January 12, 2018, 4:30:20 PM
உழவுக்கும், இயற்கைக்கும் தலைவணங்கி நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளன்று சுவையான சக்கரை பொங்கல், செய்து குடும்பத்துடன் உண்போம். அதுவும், சமையல் நிபுணர் கமலேஷ் ராவத் வழங்கும் இந்த சிறப்பு சர்க்கரை பொங்கலை செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப்
பாசி பருப்பு – கால் கப்
பால் – 4 கப்
வெல்லம் – ஒரு கப்
முந்திரி – 3 மேசை கரண்டி
உலர்ந்த திராட்சை – 3 மேசை கரண்டி
ஏலக்காய் – 5
நெய் – கால் கப்
தேங்காய் – அரை கப்
செய்முறை:
– அரிசியை இரண்டு மணிநேரத்திற்கு ஊற வையுங்கள். பின்னர், பாசிபருப்பு, அரிசி நெய் சேர்த்து 25 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்
– கவனமாக கிளறி, மிதமான அடுப்பில் வேக வைப்பது அவசியம். அதன்பின், வெல்லத்தை சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து கிளறுங்கள்.
– அதன்பின்பு, மற்றொரு வானலியில் நெய் ஊற்றி, அதில் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாலிக்கவும்.
– அதன்பின்பு, பொங்கலில் தாலித்த கலவையை கொட்டி கிளறினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Sweeten your pongal celebrations with servings of delicious sakkarai pongal