/indian-express-tamil/media/media_files/2025/09/16/actress-syamanthakiran-2025-09-16-22-13-55.jpg)
லிப்ஸ்டிக் மேல பைத்தியம், இந்த ஒரு க்ரீம் மட்டும் ரூ. 8000: பிரபல சீரியல் நடிகை மேக்கப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை சியமந்தா கிரண், தான் பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள் மற்றும் தனது தனிப்பட்ட அழகு பராமரிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பேட்டி, அழகு சாதனப் பொருட்கள் மீதான அவரது பிரியம், முதல் முறையாக மேக்கப் போட்ட அனுபவம், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் எனப் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
சினிமா உலகத்திற்கு வந்த பின் மாறிய மேக்கப் பழக்கங்கள்
தான் முதன்முதலில் மேக்கப் போட்ட அனுபவத்தை நகைச்சுவையுடன் விவரித்த சியமந்தா, அது முகத்தில் பெயிண்ட் பூசப்பட்டது போல இருந்ததாகவும், சில சமயங்களில் நீல நிறமாக மாறி கிருஷ்ணர் போலத் தோற்றமளித்ததாகவும் நகைச்சுவையாக கூறினார். பல மேக்கப் பிராண்ட் மற்றும் நுட்பங்கள் குறித்து தெரிந்துகொண்ட பிறகு, தனது இயல்பான நிறத்தை மீட்டு எடுக்க தனக்கு சிறிது காலம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேக்கப் பவுச்சில் ள்ள பொருட்கள்
சியமந்தா தனது மேக்கப் பவுச்சில் உள்ள முக்கியமான பொருட்களைப் பற்றி பேசினார். தான் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் மேக் ஸ்டுடியோ ஃபிக்ஸ் காம்பாக்ட் பவுடர் அதன் விலை ரூ.4000 ஆக இருந்தாலும், தனது சருமத்திற்குச் சரியாகப் பொருந்துவதால் அதை மட்டுமே பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், சருமப் பராமரிப்புக்காக தனது டெர்மட்டாலஜிஸ்ட் பரிந்துரைத்த சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அவரது பவுச்சில், கான்டோர், ஹைலைட்டர், பவுடர் பிரஷ் உள்ளிட்ட பல்வேறு பிரஷ்கள், பெனிஃபிட் கான்டோர், ஃபென்டி பியூட்டி மற்றும் டூ ஃபேஸ்டு லிப் கிளாஸ், ஓட் பனோரமா மஸ்காரா, லோரியல் கன்சீலர், மற்றும் ரேனியோவின் காஜல் போன்ற பல பிரபல பிராண்டுகளின் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
லிப்ஸ்டிக் மீதான பைத்தியம்
ஒரு காலத்தில் தனக்கு லிப்ஸ்டிக்கின் மீது இருந்த மோகம் குறித்து மனம் திறந்த சியமந்தா, அப்போது அவரிடம் சுமார் 30 முதல் 40 லிப்ஸ்டிக்கள் இருந்ததாகவும், ஷார்லட் டில்பெரி லிப்ஸ்டிக்கின் விலை ரூ.3800-4000 வரை இருந்தாலும், அதை வாங்கி பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். தற்போது, பாபி பிரவுன் பிராண்டின் சுமார் ரூ.8000 மதிப்புள்ள ஒரு மாய்ஸ்சரைசரை வாங்க ஆசைப்படுவதாகவும், அதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதை வாங்குவது தனது விருப்பப் பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us