/indian-express-tamil/media/media_files/2025/05/23/V4lDSz6PgCb1e6nlXHjA.jpg)
Feeling unwell after eating Symptoms
ஒவ்வொருவரும் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவு செரிமானமாவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சாப்பிட்ட பிறகு உங்களுக்கு ஏற்படும் சில அறிகுறிகள், உடலில் உண்டாகும் சில பிரச்சனைகளை அடையாளம் காண உதவும்.
இந்த அறிகுறிகள் என்னவென்றும், அவற்றின் மூலம் எம்மாதிரியான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம் என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பேசுகிறார் டாக்டர் பொற்கொடி.
சாப்பிட்ட பின் ஏற்படும் பொதுவான அறிகுறிகளும் அவற்றின் காரணங்களும்
தூக்கம் வருவது: சாப்பிட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு அதிக சோர்வாகவோ அல்லது தூக்கமாகவோ உணர்ந்தால், அது குறைந்த இரத்த சர்க்கரை அளவின் (Low blood sugar level) அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி ஏப்பம் வருவது: சாப்பிட்ட பிறகு தொடர்ச்சியாக ஏப்பம் வருவது, உங்கள் இரைப்பையில் உள்ள அமில அளவு குறைவாக (Low stomach acid level) இருப்பதைக் குறிக்கலாம்.
வயிறு உப்புசமாக உணர்வது: சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வயிறு உப்புசமாக இருந்தால், செரிமான நொதிகள் (Digestive enzymes) சரியாகச் செயல்படாமல் இருக்கலாம்.
அடிக்கடி வாய்வு பிரிதல் அல்லது வயிறு வலி: சாப்பிட்ட அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் அடிக்கடி வாய்வு பிரிந்தால் அல்லது வயிறு பிடித்து இழுப்பது போன்ற வலி ஏற்பட்டால், அது உணவு ஒவ்வாமையின் (Food intolerance) அறிகுறியாக இருக்கலாம். அதாவது, நீங்கள் சாப்பிட்ட உணவு உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
சாப்பிட்டவுடன் மலம் கழித்தல்: சாப்பிட்ட உடனேயே கழிவறைக்குச் செல்ல வேண்டிய உணர்வு ஏற்பட்டால், அது குடல் நுண்ணுயிர் சமநிலையின்மை (Gut dysbiosis) அல்லது அழற்சி குடல் நோயின் (Irritable Bowel Syndrome - IBS) அறிகுறியாக இருக்கலாம்.
மருத்துவரை அணுகுவதன் அவசியம்
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் சாப்பிட்ட பிறகு தொடர்ந்து உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது பெரிய உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.