சர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா?

சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே

சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா?

உடலில் ஏற்படும் மாற்றங்கள், சில அறிகுறிகள் இருந்தால் அது சர்க்கரை நோயாகக்கூட இருக்கலாம்.   மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில்.

Advertisment

உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். அப்படி தான் சர்க்கரை வியாதியையும் அறிகுறியை வைத்து கண்டுப்பிடித்தால்  போதும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. இதோ அறிகுறிகள்..

1. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும்.

2.  சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது வழக்கம்.

Advertisment
Advertisements

3. ரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும்.

4. சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

5. எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான்.

6. மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று
நீர்ச் சமநிலைக் குறைபாடு.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: