/indian-express-tamil/media/media_files/2025/08/21/actor-sivakumar-2025-08-21-19-34-10.jpg)
Actor Sivakumar
சினிமா உலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். அவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில், நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
நடிகர் சிவக்குமார், தன் இயல்பான பேச்சிலும், ஆழமான அனுபவத்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். சமீபத்தில் அவர் சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தருடன் இணைந்து பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை மனம் திறந்து பேசினார்.
சிவக்குமார் பேசும்போது, "கசப்பான சம்பவங்கள்னு வரும்போது, டி.ராஜேந்திரன் ஒரு மேதைங்கிறதை நான் மறுக்க மாட்டேன். அவர் ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட், வசனம்னு எதையும் காகிதத்துல எழுதி வைக்காமலே, அத்தனையும் மனசுக்குள்ள வச்சுகிட்டு ஒரு படத்தை இயக்கக்கூடிய வல்லமை படைச்சவர். அவருடைய திறமையை பற்றி சொல்ல ஆரம்பிச்சா, சொல்லிக்கிட்டே இருக்கலாம்.
ஒரு படத்துல நடிக்க என்னை கூப்பிட்டார். அப்போ, 'நீங்கதான் இந்தப் படத்தோட ஹீரோ'னு உறுதியா சொன்னார். கதை கேட்டேன், நல்லாவே இருந்தது. நானும் சம்மதிச்சேன். ஆனா, ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான் தெரிஞ்சுது, டி.ஆர் கதை முழுவதையும் மாத்திப் போட்டுட்டார்னு! படத்தோட ஹீரோவான எனக்கு இடைவேளைக்குப் பிறகுதான் காட்சிகள் வர்ற மாதிரி கதையை மாத்திட்டார். என் பெயர் டைட்டில்ல வரும்போதுதான் எனக்கு அதிர்ச்சி. நான் ஹீரோவான்னு கேட்டதுக்கு, ஒரு ஹீரோன்னா இடைவேளைக்குப் பிறகுதான் வரணும்னு சொல்லி என்னை சமாதானப்படுத்த முயன்றார்.
அவர் என்னோட கதாபாத்திரத்தை முக்கியத்துவம் இல்லாததா ஆக்கிட்டாரு. இது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. நான் ஹீரோவாக நடிச்ச அந்தப் படத்துல, எனக்கு டூப் போட்டு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்த கேரக்டர் இறந்துபோனதாக காட்சி அமைத்திருந்தார். நான் ஹீரோவாக நடிச்சு, படத்தில் செத்துப்போற மாதிரி ஒரு நிலைமைக்கு ஆளானேன். இதுதான் டி.ஆரோட நான் எதிர்கொண்ட மிகவும் கசப்பான அனுபவம். ஆனா, என்னதான் இருந்தாலும், டி.ராஜேந்திரன் ஒரு சிறந்த மேதைங்கிறதை நான் குறைச்சு மதிப்பிட மாட்டேன். அவர் ஒரு தனிப்பட்ட மேதை" என்று சிவக்குமார் அந்தச் சம்பவத்தை பற்றி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.