scorecardresearch

தாஜ்மஹால்! அதிகம் தேடப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்.. மற்றவை இதோ!

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான அழகான கல்லறையை, ஒரு மாதத்தில் 14 லட்சம் பேர் தேடியுள்ளனர்.

Taj Mahal
Taj Mahal is the most searched UNESCO World Heritage Site

உலக பாரம்பரிய தளம்’ என்பது யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட சிறப்பு கலாச்சாரம் கொண்ட இடமாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கண்டறிந்து ஆராய்வதற்காக பயணம் செய்யும், கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு இது ஒரு அற்புதமான கருவியாகும். இந்தப் பட்டியலில் உலகம் முழுவதிலுமிருந்து 1,154 தளங்கள் உள்ளன, இருப்பினும் சில மற்றவற்றை விட அதிக பிரபலமாக உள்ளன.

Zitango Travel இன் தரவுகள், உலகில் உள்ள மற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை விட, மக்கள் தாஜ்மஹாலை அதிகம் தேடுவதாக கூறுகிறது. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான அழகான கல்லறையை, ஒரு மாதத்தில் 14 லட்சம் பேர் தேடியுள்ளனர். ஜனவரி 2022 இல், ஆக்ரா வட்டத்தின் ASI இன் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல், ஒரு சனிக்கிழமையன்று 10,000 மக்கள் தாஜ்மஹாலைப் பார்வையிட்டதாக கூறுகிறார்.

வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால தளங்களை பார்வையிடுவதில்’ இப்போது அதிகமான பயணிகள் ஆர்வமாக உள்ளனர், கம்பீரமான இன்கா நகரமான மச்சு பிச்சு 11 லட்சம் தேடல்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் (7.82 லட்சம் தேடல்கள்) மற்றும் ஜோர்டானில் உள்ள பெட்ராவின் நெபடான் நகரம் (5.75 லட்சம் தேடல்கள்) பற்றிய தேடுதல்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின் பண்டைய வரலாற்று தளங்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்தியது.

இவை யுனெஸ்கோவின் முதல் 10 உலக பாரம்பரிய தளங்கள்:

1. தாஜ்மஹால் (14,00,000) – இந்தியா

2. மச்சு பிச்சு (11,00,000) – பெரு

3. ரியோ டி ஜெனிரோ (8,24,000) – பிரேசில்</p>

4. யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (7,93,000) – அமெரிக்கா</p>

5. ஸ்டோன்ஹெஞ்ச் (7,82,000) – இங்கிலாந்து

6. லிபர்ட்டி சிலை (7,57, 000) – அமெரிக்கா

7. பெட்ரா (5,75,000) – ஜோர்டான்

8. சின்க் டெர்ரே (5,50,000) – இத்தாலி

9. வெர்சாய்ல்ஸ் அரண்மனை (4,64,000) – பிரான்ஸ்

10. சிச்சென் இட்சா (4,45,000) – மெக்சிகோ

இதுவரை எத்தனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Taj mahal is the most searched unesco world heritage site