Advertisment

வீட்டில் கொரோனா நோயாளிகள்: செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை எவை?

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருத்துவர்கள் அறிவுறுத்தும் சில வழிமுறைகளையும் பின்பற்றி வீட்டினுள் தொற்றுப் பரவுவதை தவிர்க்கலாம்.

author-image
WebDesk
New Update
வீட்டில் கொரோனா நோயாளிகள்: செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை எவை?

Corona Updates in Tamil : கொரோனா தொற்று இந்தியாவில் உச்சமடைந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பானது 3 லட்சத்தை கடந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி இருந்தது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளிகளிடமிருந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவுதால், குடும்ப தொற்றுகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

Advertisment

இருப்பினும், வீடுகளில் கொரோனா நோயாளிகளை முழுமையாக தனிமைப்படுத்துவது இயலாத காரியம் என்றாலும், இதற்காக வருத்தப்பட தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருத்துவர்கள் அறிவுறுத்தும் சில வழிமுறைகளையும் பின்பற்றி வீட்டினுள் தொற்றுப் பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளை பராமரிப்பது குடும்பத்தாரோடு கடமையாக இருந்தாலும், தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதும் இன்றியமையாதது ஆகும்.

கொரோனா பாதித்தவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை :

  • அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எல்லா நேரங்களிலும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • நோயாளிகளின் துணிகளை குடும்ப உறுப்பினர்களின் துணிகளோடு சேர்த்து துவைக்க கூடாது. தனியாகவே துவைக்க வேண்டும். கொரோனா நோயாளிகளின் துணிகளை துவைக்கும் போது, கிருமிநாசினிகளை கட்டாயம் பயன்படுத்தவும்.
  • தனித்தனி குளியல் அறைகளுக்கு வசதி இல்லாது இருந்தால், அனைவரும் பயன்படுத்தும் குளியல் அறையை எப்போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
  • நோயாளிகள் பயன்படுத்திய மருத்துவப் பொருள்களை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும்.

நீங்கள் செய்ய கூடாதவை :

  • கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறையில், மற்றவர்கள் நுழையக் கூடாது. நேரடித் தொடர்பின் மூலம் கொரோனா பரவுவதை விட, காற்றின் வழியாக அதிகம் பரவுவதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • தொற்றுக்கு உள்ளாகி குணமடையாத நோயாளிகள் வீட்டில் இருப்பின், அக்கம் பக்கத்தாருடன் தொடர்பில் இருக்காதீர்கள். இது, தொற்று மற்றவர்களுக்கும் பரவ வழி வகுக்கலாம்.
  • கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணிர் கொண்டு கழுவுங்கள். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியமாகிறது.

இந்த சூழல் நிலையானது அல்ல. மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த சூழலை கவலையில்லாமல் தன்னம்பிக்கையுடன் கடந்து செல்வோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Quarantine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment