இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது ஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு.
நடைபயணம் மேற்கொள்ளவும் இந்த பள்ளத்தாக்கு புகழ் பெற்றது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக உள்ளது. மேலும் புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டால்லி பள்ளத்தாக்குவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.
இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள சிறுத்தை வகை பூனைகள் அரிய வகை விலங்கினமாகும். இந்தியாவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% இந்த இடத்திலேயே காணலாம். இந்த சரணாலயத்தின் வழியாக கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் பாய்ந்தோடுகிறது. இந்த இடத்திற்கு பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.