மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா அணிந்திருந்த ஸ்டைலான கவுன் கவனம் ஈர்த்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/2633be77-395.jpg)
மும்பையில் நடைபெற்ற GQ India Best Dressed 2023 நிகழ்ச்சியில், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், விதவிதமான உடையில் வந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா, அவரின் காதலர் விஜய் வர்மாவுடன் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/37e62a3a-2b5.jpg)
தமன்னா ஒரு ஊதா நிற சீக்வின் கவுனை அணிந்திருந்தார், அதில் ஹால்டர் நெக்லைன் மற்றும் பக்கவாட்டில் இருந்து பின்புறம் வரையிலான கட்டிங் உடன், பின்புறம் வெளிப்பட்டது. ஆடை வடிவமைப்பாளர் லாகுவான் ஸ்மித்தின் ஸ்பிரிங் சம்மர் 2023 கலெக்ஷனில் இருந்து பெறப்பட்ட இந்த கவுனின் விலை $2,550, அதாவது தோராயமாக ரூ.2,10,000. இந்த ஊதா நிற புள்ளிகள் கொண்ட பம்புகளுடன் பொருத்தப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/c3546b1e-a24.jpg)
/indian-express-tamil/media/post_attachments/4b5bd1c6-275.jpg)
/indian-express-tamil/media/post_attachments/969e529a-738.jpg)
தமன்னாவின் வயலட் கவுனில் தடிமனான கல் பதிக்கப்பட்ட சோக்கர் பொருத்தப்பட்டிருந்தது. தமன்னா சிலுவை பதக்கத்துடன் தங்க நெக்லஸ் அணிந்திருந்தார். பிளம் நிற உதடு, கிளாசிக் கருப்பு ஸ்மோக்கி, சிக்கலான அலைகள் கொண்ட தலைமுடி போன்றவை அந்த ஆடைக்கு மேலும் அழகு சேர்த்தன.
/indian-express-tamil/media/post_attachments/3da90661-7c6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/3000cba5-3dd.jpg)
GQ India Best Dressed 2023 நிகழ்ச்சியில் தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவுடன் கலந்துக் கொண்டார். விஜய் வர்மா மீஷ் சர்ட் மற்றும் கருப்பு பேனல் பேண்ட் மீது வெள்ளி வடிவ பிளேஸரை அணிந்திருந்தார். இருப்பினும் தமன்னா ஆடை மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“