4 ஆயிரம் பாடல்களுக்கு நடன இயக்குனரா இருந்த அந்த மாஸ்டர்… ஆனா எனக்கு மட்டும்: ஐஸ்வர்யா ராஜேஷ் எமோஷனல்

கலா மாஸ்டர்தான் எனக்கு எப்பவுமே கம்மியா மார்க் கொடுப்பாங்க. ஆனா அந்த கம்மியான மார்க்குதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. அந்த மேடையில இருந்து இந்த மேடைக்கு வரது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.

கலா மாஸ்டர்தான் எனக்கு எப்பவுமே கம்மியா மார்க் கொடுப்பாங்க. ஆனா அந்த கம்மியான மார்க்குதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. அந்த மேடையில இருந்து இந்த மேடைக்கு வரது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.

author-image
WebDesk
New Update
Aishwarya Rajesh movies

Aishwarya Rajesh

கலா மாஸ்டரின் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி, பலரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்பயணமும் அங்கிருந்துதான் தொடங்கியது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது குருவான கலா மாஸ்டர் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

Advertisment

கலா மாஸ்டர்தான் எனக்கு எப்பவுமே கம்மியா மார்க் கொடுப்பாங்க. ஆனா அந்த கம்மியான மார்க்குதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. அந்த மேடையில இருந்து இந்த மேடைக்கு வரது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. என்னோட ஆரம்பம் கலா மாஸ்டர்கிட்ட இருந்துதான் ஆரம்பிச்சது. அந்த வாய்ப்பு எனக்கு கொடுத்ததுக்கு அவங்களுக்கு ரொம்ப நன்றி.

மாநாடு மயிலாட நிகழ்ச்சியில நான் எல்லா சுற்றுகளிலும் கலா மாஸ்டர்கிட்ட திட்டு வாங்கினேன். ஆனா, அந்த திட்டு எல்லாமே என்னை மேம்படுத்தறதுக்குத்தான். அது எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தது. ஒரு ரியாலிட்டி ஷோவுல இருந்து ஒரு கதாநாயகியாக ஆக முடியும்ங்கிற பெரிய நம்பிக்கையை கலா மாஸ்டரின் மாநாடு மயிலாட ஷோதான் எனக்குக் கொடுத்தது.

Advertisment
Advertisements

அப்பதான் ஒருமுறை ரம்பா மாம் என்கிட்ட சொன்னாங்க, "ஐஷு, நீயும் மாநாடு மயிலாடல இருந்து வந்திருக்க. சாய் பல்லவி உங்கள் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில இருந்து வந்திருக்காங்க. உங்க இரண்டு பேரையும் நான் எலிமினேட் பண்ணிட்டேன். அதனாலதான் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஸ்டார்ஸா இருக்கீங்க". அதைச் சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்குப் பெருமையா இருந்தது.

இன்னைக்கு 12 வருஷமா சினிமாவுல இருக்கேன். மாஸ்டர் என் குரு மட்டுமல்ல, என் குடும்பத்துக்கும் ரொம்ப க்ளோஸ். மாஸ்டர் என் வாழ்க்கையில எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்திருக்காங்க. மாநாடு மயிலாட சீசன் 2-ல நான் இருக்கும்போது, என்னோட அண்ணன் இறந்துட்டார். அப்போ கலா மாஸ்டர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நிதி உதவி செஞ்சு, கவலைப்படாதே நாங்க இருக்கோம்னு சொல்லி ஒரு தாயை மாதிரி எனக்கு ஆதரவு கொடுத்தாங்க.

நான் பெரிய கதாநாயகியாக உயர்ந்ததும், அவங்க படத்தில என்னை கதாநாயகியாக நடிக்க வைக்க கதை சொன்னாங்க. 4000 பாடல்களுக்கு நடன இயக்குனரா இருந்த மாஸ்டர் ஒரு பாட்டுக்குக் கூட என்னை ஆட வைக்கலை. ஆனா, அவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டதுல எனக்கு வருத்தமே இல்லை.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: