Advertisment

வியர்க்க, விறுவிறுக்க இரவில் 'வாக்கிங்' போகும் குஷ்பூ: 21 கிலோ குறைத்த ரகசியம் இதுதானா?

நான் என்னால் முடியும்போதெல்லாம் நடப்பது, முடிந்தவரை வொர்க்அவுட் செய்வது என வழக்கமான செயல்களை செய்வேன். அதிகமாக சாப்பிடுவது இல்லை,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வியர்க்க, விறுவிறுக்க இரவில் 'வாக்கிங்' போகும் குஷ்பூ: 21 கிலோ குறைத்த ரகசியம் இதுதானா?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்த நிலையில், தற்போது தான் உடல் எடை குறைத்த ரகசியத்தை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

நடிகை, அரசியல்வாதி என பரபரப்பாக இயங்கி வரும் நடிகை குஷ்பு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவில், நீங்கள் விரும்பிய உடற்பயிற்சி இலக்கை அடைந்தவுடன், உங்கள் வேகம் மற்றும் உங்கள் வழக்கமான அர்ப்பணிப்புடன் இருந்தால் மட்டுமே தொடர்ந்து உடற்பயிற்சியிள் பலன்களை பெற முடியும் என்று கூறியுள்ளார்.

உங்களது இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்பதால் உங்களில் சிறந்த செயலை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நான் 21 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன் என்றால், மீண்டும் அவ்வாறு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அதனால் நான் என்னால் முடியும்போதெல்லாம் நடப்பது, முடிந்தவரை வொர்க்அவுட் செய்வது என வழக்கமான செயல்களை செய்வேன்.  அதிகமாக சாப்பிடுவது இல்லை,” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான நிபுணர்களின் கூற்றுப்படி, நிரந்தர உணவு மாற்றங்கள் வழக்கமான உடற்பயிற்சிகள் அதிகபட்ச நன்மைகள் மற்றும் உடல் எடை குறைப்புக்கு நீண்ட கால வெற்றியை கொடுக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

உடல் எடையை குறைக்கும் சில ஆரோக்கியமான செயல்கள்

ஆரோக்கியமான மற்றும் கவனத்துடன் உண்ணுதல்:

தேவையற்ற உணவுகளை உண்பது கடின உழைப்பு அனைத்தையும் வீணாக்கிவிடும். அதனால் வழக்கமான உணவு முறையை பராமரிக்கவும். மூன்று வேளை உணவுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் அல்லது உங்கள் உணவுக்காக என்ன வாங்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். இது ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்க்க உதவும், மேலும் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

 உடற்பயிற்சிகள்:

ஆரோக்கியமான எடையை பராமரிக்க, உடலின் கூடுதல் கலோரிகளை அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் எரிக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி கட்டாயம்.

உணவு இதழ்கள்:

உங்கள் உணவைப் பற்றிய எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக வைத்திருப்பது உங்கள் உடலைப் பற்றிய பொறுப்பை உங்களுக்கு அதிகமாக்குகிறது. உங்கள் உடற்பயிற்சி முறை, வைட்டமின்கள் மற்றும் உட்கொள்ளும் கலோரிகளைக் கவனியுங்கள்

நிலையான வாழ்க்கை முறை:

தூக்கம், உணவு, உடற்பயிற்சிகள் போன்ற அனைத்து தேவையான நடவடிக்கைகளுக்கும் வழக்கமான அட்டவணையை நிர்வகிப்பது உங்கள் வாழ்க்கையை சீரான பாதைக்கு மாற்றும்.

விறுவிறுப்பான நடைபயிற்சி எதற்கு உதவுகிறது?

நடைப்பயிற்சி உங்களை வியர்வையில் நனைய வைக்கிறது மற்றும் சிறந்த கார்டியோ உடற்பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், குஷ்புவைப் போலவே, நாளின் எந்த நேரத்திலும் இதைச் செய்யலாம், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, மிதமான தீவிர உடற்பயிற்சிக்கான உங்கள் இலக்கு இதயத் துடிப்பு அதிகபட்ச இதயத் துடிப்பில் 50 முதல் 70 சதவிகிதம் ஆகும், மேலும் தீவிரமான செயல்பாட்டிற்கான உங்கள் இதயத் துடிப்பு உங்கள் அதிகபட்ச இதயத் துடிப்பில் 70 முதல் 85 சதவிகிதம் ஆகும் என்று கூறியுள்ளனர்.

விறுவிறுப்பான நடைப்பயணமும், உங்கள் கலோரிகளை எரித்து, அதிக எடையைக் குறைக்கிறது. வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது, ஆரோக்கியமான உடற்பயிற்சிக்கான மற்ற வலிமைப் பயிற்சிகளுடன் இணைந்து செய்தால், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நடைப்பயிற்சி மேற்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் மனநலத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment