scorecardresearch

365 நாளுக்கும் 365 சேலைகள்… ஒரு வீட்டையே சேலை ஸ்டாக் வைக்க ஒதுக்கிய நளினி!

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Nalini
Actress Nalini Saree collection

நடிகை நளினி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான முகம்.

1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.

ஆனால், இவர்களின் உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து செய்து கொண்டனர்.

இப்போது நளினி, டி.வி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நளினி  ஒருமுறை எஸ்.எஸ். மியூசிக் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

 அதில் தொகுப்பாளர் நளினியிடம் 365 நாளுக்கும், 365 புடவைகள் கட்டுவீங்கனு, உங்களை பத்தி நாங்க சுவாரசியமான விஷயம் கேள்விப்படோம். மொத்த உங்க வார்-டிரோப்ல எவ்வளவு புடவைகள் இருக்கு என கேட்டார்.

அதுக்கு நளினி சிரித்தவாறே, வார்-டிரோப் இல்ல, ஒரு வீடு ஃபுல்லா புடவைகள் வச்சிருக்கேன் என்றார்.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress nalini saree collection