இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. வயதுக்கு ஏற்ற உடல் எடையை வைத்திருக்க உடற்பயிற்சி முக்கியம் தான் என்றாலும், தவறான உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பால், பல நோய் தாக்கங்கள் ஏற்பட்டு, நமது அன்றாட பணிகளைகூட செய்ய முடியாத சூழல் இருக்கிறது.
Advertisment
நடுத்தர வயதினரை போல் இளைஞர்கள் பலரும் இப்போது அதிக உடல் எடை பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை நிர்வகிக்க, பல முயற்சிகளை மேற்கொண்டு ஆங்கில மருத்துவத்தை நாடி செல்லும் நிலையில், பலர் உள்ளனர். ஆனால், உடலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க இயற்கை மற்றும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அதேபோல் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது தான் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இந்த உடல் கொழுப்பை குறைப்பதற்கு, பல இயற்கை முறை வைத்தியங்கள், இருக்கிறது. அந்த வகையிலான ஒரு வைத்தியத்தை தான் நடிகை ராதிகா வாணி ராணி சீரியலில் கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் உடல் எடையை குறைக்க என்ன செய்வது என்று கேட்கிறார்.
Advertisment
Advertisement
உடல் எடை அதிகரிப்புக்கு, கொழுப்பு தான் முக்கிய காரணம் என்று சொல்லும், ராதிகா, தினமும் படுக்க செல்லும் முன், 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சியை நன்றாக நசுக்கு தேனில் ஊறவைத்துவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, இந்த தேனில் ஊறவைத்த பூண்டு இஞ்சி கலவையை சாப்பிட்டுவிடுங்கள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்பளர் வெந்நீர் குடித்துவிடுஙகள். இப்படியே 45 நாட்கள் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு குறைந்த தொப்பை இருக்காது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“