செம்ம ஃபேஷன் ஜிமிக்கி... வனிதாவின் இந்த மாற்றத்தை கவனித்தீர்களா?
Tamil News Update : தான் மீண்டும் பிரபலமாக பெரிய உதவி செய்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நினைவாக பிக்பாஸ் லோகோ உள்ள செயினை அணிந்து தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tamil News Update : தான் மீண்டும் பிரபலமாக பெரிய உதவி செய்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நினைவாக பிக்பாஸ் லோகோ உள்ள செயினை அணிந்து தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tamil Actress Vanitha Vijayakumar New Style : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாள இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதன்பிறகு சைலண்டாக இருந்த அவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் பிரபலமடைந்தார். தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி சாம்பியன், பிபி ஜோடிகளில் பங்கேற்ப்பு என வனிதா பிஸியாக நகையாக வலம் வந்தார்.
Advertisment
இடையில் பிரஷாந்துடன் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் டிராப், உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், 2 குழந்தைகளுக்கு தாயான வனிதா கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் சில நாட்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு வனிதா அடுத்த திருமணம் செய்துகொண்டார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு வனிதாவே விளக்கமும் கொடுத்திருந்தார்.
இதனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார், சமீபத்தில் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த தொழில் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வரும் வனிதா, அடிக்கடி வெளியிடும் புது பேஷன் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது தொடர்ந்து வரும் நிலையில், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களையும் வாரிகுவித்து வருகிறது.
இந்நிலையில், தான் மீண்டும் பிரபலமாக பெரிய உதவி செய்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நினைவாக பிக்பாஸ் லோகோ உள்ள செயினை அணிந்து தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செயின் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்றாக வெவ்வேறு வித விதமான போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை இணைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், பிக்பாஸ் மீது உங்களுக்கு அவவ்ளவு காதலா என்று பலரும் கேட்டு வருகினறனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனுடன் சேர்த்து புதுவிதமான காதணிகளை அணிந்துள்ள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். பெண்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil