பொதுவாக அழகு என்றாலே, அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். ஒவ்வொரு நபரும் தங்களை மற்றவர்கள் மத்தியில் அழகாக காட்டிக்கொள்ள, பல்வேறு அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பணக்காரர்கள், விலை உயர்ந்த அழகு சாதனை பொருட்களை பயன்படுத்தினாலும், நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வீட்டில் இருக்கும் கடலை மாவு, பைத்தமாவு உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்களை அழகுப்படுத்திக்கொள்கின்றனர்.
Advertisment
அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே எளிமையாக முகம் பொலிவு பெருவதற்காக, இந்த டிப்ஸை பயன்படுத்தலாம். இதற்கு சில பொருட்கள் மட்டும் தான் தேவை.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
தேன் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
தக்காளி – 1
செய்முறை:
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அரிசி மாவை சேர்த்து அதனுடன் தேனை கலந்து கிளறவும். அடுத்து அதில் சர்க்கரை, மற்றும் பேஸ்ட் செய்த தக்காளியை சேர்த்து குழப்பி, முகத்திற்கு தடவினால், உடனடியாக மாற்றம் தெரியும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.