/indian-express-tamil/media/media_files/2025/05/03/HzucvSV5TVcgmH1KYYHw.jpg)
banana face pack
அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய அம்சம். குறிப்பாக, முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அது அனைவருக்கும் வரும் ஒரு இயற்கையான ஆசை. முகம் அழகாக இருப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும், மற்றவர்களிடம் நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்தும், மேலும் மகிழ்ச்சியாக உணர வைக்கும். உண்மையில், அழகு என்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வையைப் பொறுத்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அழகு ரசனை இருக்கலாம். ஆனாலும், பொதுவாக ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் சுத்தமான சருமம் அனைவராலும் விரும்பப்படுகிறது. ஒருவரின் முகத்தில் இருந்து வெளிப்படும் புன்னகை, கருணை, நம்பிக்கை போன்ற நேர்மறையான உணர்வுகள் அவர்களை மிகவும் அழகாகக் காட்டும். முக அழகு என்பது ஒரு புறத்தோற்றத்தையும் தாண்டி, ஆரோக்கியம், தனித்துவம் மற்றும் வெளிப்படும் உணர்வுகள் ஆகியவற்றின் கலவையாகும்.
இப்படி முகத்தை அழகாக பளபளப்பாக வைத்துக்கொள்ள பலரும் பலவிதமாக பேஸ் பேக்குகளை பயன்படுத்துவார்கள். அந்த வகையில், சின்னத்திரை நடிகை ஜெனிஃபர் தான் முகத்தின் அழக்கிற்காக பயன்படுத்தும் பொருட்கள் குறித்து ஒரு வீடியோவில் கூறியுள்ளார். மைசூர் பருப்பை அரைத்து அதில் பால் சேர்த்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது முகத்திற்கு க்ளோயிங் மற்றும் ப்ரைட்நஸ் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், இட்லிக்கு ஊறவைக்கும் ஊளுந்தை எடுத்து அதில் தக்காளி சேர்த்து அரைத்து முகத்திற்கு போடலாம். ரொம்ப ப்ரைட்நஸ் கொடுக்கும். பேபி ஆயில், தேங்காய் எண்ணெய், ஆல்மண்ட் ஆயில் ஆகியவற்றையும் முகத்திற்கு பயன்படுத்தலாம். இந்த மாதிரி விஷயங்களை தான் நான் பயன்படுத்துகிறேன் என்று நடிகை ஜெனிஃபர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us