எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற ஆசை... யார் இந்த பிக் பாஸ் சோம் சேகர்?

இந்த இளம் மாடல், கட்டாயம் மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியாக அமைவார்

இந்த இளம் மாடல், கட்டாயம் மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியாக அமைவார்

author-image
WebDesk
New Update
Tamil bigg boss contestent som shekar model som shekar

Tamil bigg boss contestent som shekar model som shekar

Tamil bigg boss contestent som shekar model som shekar : விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோ தொடங்கி விட்டது. வழக்கம் போல் எந்த பக்கம் திரும்பினாலும் பிக் பாஸ் பேச்சு. மற்ற 3 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் செலபிரிட்டிஸ் கொஞ்சம் சோஷியல் மீடியா ஆக்டிவர்ஸாக இருக்கின்றனர். இதில் பலருக்கும் பரீட்சைய படாத முகம் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்தி, பாலா, சோம் சேகர்.

Advertisment

இதில் சோம் சுந்தர், விஜய் டிவிக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த முகம் தான். சின்னதாக ஒரு ஃபிளாஷ்பேக் போனால் உங்களும் தெரிய வரும்.

யார் இந்த சோம் சேகர்?

பிக் பாஸ் இல்லத்தில், பத்தாவது போட்டியாளராக சோம் சேகர் அறிமுகமானார். அதிகம் பிரபலமில்லாத ஒரு மாடல் . அது மட்டுமின்றி, ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள்‌ போன்றவற்றில் நடித்தும் உள்ளார்.விஜய் டிவியில் 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சோம சேகர். விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சோம் சேகர், மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரரும் ஆவார். இந்த இடத்திற்கு வருவதற்கு பத்து வருடங்கள் கஷ்டப்பட்டதாகவும் அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளதாகவும் பிக் பாஸ் அறிமுக நிகழ்ச்ச்சியில் சோம் கூறியிருந்தார் ஞாபகம் இருக்கிறதா?

Advertisment
Advertisements

publive-image

அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை . சோம் சேகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் கட்டாயம் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாகலாம். எதுவாயினும் இந்த இளம் மாடல், கட்டாயம் மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் அவர் சிங்கிள் என்பதால் பிக்பாஸ் வீட்டில் லவ் ட்ராக்கில் அவர் பயணிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.சோம் சேகரை கடந்த ஆண்டு வெற்றி பெற்ற முகேனுடன் தற்போதே தொடர்பு படுத்திப் பேசி வருவதால் இவர் அவரைப் போல வெற்றி பெற்று சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: