சுத்தமான பால், ஏலக்காய், தேன்… உங்க முகத்தில் இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

Tamil LIfeStyle Update : ஏலக்காயில், சில பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது, இது பல தோல் பிரச்சினைகளை போக்கும்

Tamil Lifestyle Milk Honey and Cardamom : விஞ்ஞான உலகில் பலரும் இயற்கை பொருட்களின் பயன்கள் தெரியாமல் விலையுயர்ந்த அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த அழகு சாதனை பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தோல் மற்றும் உடல் அழகை மேம்படுத்துவதற்கு விலையுயர்ந்த அழகு பொருட்களை விட வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களே அதிக பலன் அளிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

நமது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமையலறை பொருட்களில் தீர்வு உண்டு என்பதை நாம் நம்ப வேண்டும். பெரும்பாலான வீட்டு பொருட்கள் முகம் மற்றும் கூந்தலில் பலவகை நன்மைகளை அளிக்கிறது, ஆனால் இந்த பொருட்களை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பலரின் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். அதில் சில புள்ளிகள் அடிப்படையில் பாதிப்பில்லாத புள்ளிகளாக இருக்கலாம். ஆனால் இந்த புள்ளிகளை நீக்க அழக சாதனை பொருட்களை விட இயற்கையில் கிடைக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்துவதால், நீங்கள் நினைத்ததை விட பெரிய நன்மைகள் கிடைக்கும். விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களுக்கு பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, வீட்டிலேயே சிறிது ஏலக்காயை வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

ஏலக்காயில், சில பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது, இது பல தோல் பிரச்சினைகளை போக்கும். கூடுதலாக, இது ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் சருமத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். ஏலக்காய் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது எப்படி இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால்

ஒரு ஏலக்காய்

தேன்

செய்முறை

ஏலக்காயை அரைத்து நசுக்கி, பின்னர் பாலில் சேர்க்கவும்.இதற்கு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து, அதனை பேஸ்ட் உருவாக்க வேண்டும் இந்த பேஸ்டை முகத்தில், குறிப்பாக கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மீது தடவவும்.

நன்றாக மசாஜ் செய்து குறைந்தது 15 நிமிடங்களுக்கு காய விடவும். அதன்பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும். இதை வழக்கமாக பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கி, மென்மையான மற்றும் உறுதியான தோலைக் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cardamom to give you a blemish free face update

Next Story
ராஜா சார் சந்திப்பு, முதல் தேசிய விருது, தமிழ் மொழிப் பயிற்சி – சின்னக்குயில் சித்ரா ரீவைண்ட்Chinnakuyil Chithra Birthday Life Travel Rewind Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com