இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி. அரிசி மற்றும் உளுந்து மாவை சேர்த்து புளிக்க வைத்து தயார் செய்யப்படும் இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார் என பலவையாக சைடுடிஷ் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த இட்லி, பெரும்பாலும் காலை மற்றும் இவு உணவாக எடுத்துக்கொள்கின்றனர்.
காலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி தான் முதல் உணவாக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீஸ் செல்லும் நபர்கள் என பலரும் காலை உணவாக இட்லியை எடுத்துக்கொள்வது வழக்கமானது. இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்றாலும் கூட, இட்லி சாப்பிடுவது கெடுதலும் கொடுக்கும் என்று தகவல்கள் உள்ளது. எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக எடுத்துக்கொணடால் அது நமக்கு நஞ்சாக மாறிவிடும் என்று சொல்வார்கள்.
அதேபோல் ஒரு உணவை எடுத்துக்கொள்ளும்பொது முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முறை தவறி எடுத்துக்கொண்டால் அதுவே நமக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் இட்லி எப்படி சாப்பிட வேண்டும் என்று பிரபல செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். பொதுவாக இட்லிக்கு சாம்பார் சட்னி என்று இருந்தாலும், சட்னியில் கார சட்னி, கடலை சட்னி, என பல வகைகள் உள்ளது. அதேபோல் மிளகாய் பொடி, இட்லி பொடி சேர்த்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள.
இட்லியை ஒரு கப் சாம்பார் அல்லது ஒரு சட்னி வகை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. அதுவே 4 இட்லிக்கு, 4 வகை சட்னி, இட்லி பொடி, மிளகாய் பொடி நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு நன்றாகத்தான் இருக்கும் ஆனால் பின்னால், வயிற்றில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகுமோ அத்தனையும் உண்டாகும். நெஞ்செறிச்சல், உள்ளிட்ட பல பிரச்சனைகள் வரும். அப்போது வந்து நான் வெறும் இட்லி தான் சாப்பிட்டேன் எப்படி அந்த பாதிப்பு வந்தது என்று சொல்ல முடியாது.
2 இட்லிக்கு ஒரு கப் சாம்பார் என்பது சரியானது. இப்படி சாப்பிட்டால் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதுவே, 2 இட்லிக்கு 6 கப் சாம்பார் ஊற்றி சாப்பிடுவேன் என்று சொன்னால் பிரச்னைதான் வரும். அதேபோல் ஒரு மாதத்திற்கு காலையில் பொங்கல் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் உடல் எடை கூடும் என்று வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“