/indian-express-tamil/media/media_files/2025/05/09/3snF5RjgIelbiqhzFpHR.jpg)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, திருமணத்திற்கு பிறகு, ஒடல் உடை கூடிய நிலையில், தீவிர உடற்பயிற்சியின் காரணமாக தற்போது அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2002-ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்திருந்தார். சூர்யா நாயகனாக நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை, நடுநிசை நாய்கள் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.
கடைசியாக இந்தியில் அஜய் தேவகனுடன் இணைந்து, நாம் என்ற இந்தி படத்தில் நடித்திருந்த சமீரா, அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார். ஸ்லிம்பாக அழகாக திரைப்படங்களில் வலம் வந்த சமீரா, திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்தவுடன் உடல் எடை அதிகமாகி காணப்பட்டார். அதே சமயம், தனது உடலமைப்பு குறித்து சமூகவைலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு வெளிப்படையாகும், தன்னம்பிக்கையுடனும் பதில் அளித்து வந்த சமீரா இணையத்தில் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
இதனிடையே தற்போது சமீரா, தனது அயராத உடற்பயிற்சியின் காரணமாக உடல் எடை குறைந்து ஃபிட்டாக மாறியுள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் பலரும், அவரது உடல் எடை குறைந்தது குறித்து ஆச்சரியமாக கேட்டு வரும் நிலையில், இது குறித்து அவரின் பயிற்சியாளர் அஷ்வின் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். சமீரா ஆரம்பத்தில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், அவை எதிர்பார்த்த பலனை உடனடியாகத் தரவில்லை. இதன்பிறகு அவருக்காக தனியாக உடற்பயிற்சி திட்டங்கள் வகுக்கப்பட்டது. இந்த திட்டங்களை சரியாக விடா முயற்சியுடன் பின்பற்றியதே சமீராவின்வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.