tamil cinema news: உங்கள் குழந்தை பருவ புகைப்படங்களை எடுத்து பாருங்கள், அந்த நாட்கள் திரும்ப வரவே வராது, சில புகைப்படங்கள் உங்களை சோகத்தில் ஆழ்த்தும், சில புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே காமெடியாக இருக்கும். காலம் அவ்வளவு வேகமாகவா நகர்கிறது என்பது போல இருக்கும். தற்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரபலங்களின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
”அந்த குழந்தையே நீங்க தான் பாஸ்” என்பது தான் சிலர் நடிகர் நடிகைகள் அடையாளமே கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி ஒருவேளை நீங்கள் சரியாக கண்டுப்பிடித்து விட்டால் நீங்கள் நிச்சயமாக திறமைசாலிகள் தான்.
வாருங்கள் ThenvNow வில் தமிழ் சினிமா நட்சத்திரங்களில் குழந்தை பருவ புகைப்படங்களை காணலாம்.
1. பார்த்திபன் மகள் கீர்த்தனா:
மணிரத்தனத்தின் கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மகளான கீர்த்தனா. இவரை குழந்தை நட்சத்திரமாக அதிகமானோர் பார்த்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகிய போது அனைவரையும் ஆச்சரியத்து போனார்கள். அவரா இவர் அடையாளமே தெரியவில்லையே என்று.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-14-300x169.jpg)
2. நடிகர் ஜீவா:
தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாகவும், லோக்கல் ஹீரோவாகவும் வலம் வந்தவர் நடிகர் ஜீவா. இவரின் பள்ளிக்கால புகைப்படத்தை இங்கே பகிர்ந்துள்ளோம் பாருங்கள் ஷாக் ஆயிடுவிங்க.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-15-300x213.jpg)
3. நடிகர் ஆர்யா:
ஆர்யாவின் இளமைக்கால புகைப்படம் இணையத்தில் கிடைப்பதே மிகவும் கடினம். காரணம், ஆர்யாவின் குடும்பத்தில் புகைப்படம் எடுக்கும் பழக்கம் கிடையாதாம். இது அவரின் வீட்டிற்கு வந்த மாமா ஒருவர் எடுத்த ரேர் புகைப்படம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/1111-300x200.png)
4.வித்யுலேகா ராமன்:
தமிழ் சினிமாவில் இப்போதைய பெண் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் வித்யுலேகா ராமன். குழந்தைகள் தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ச்சைல்ட் உட் ஃபோட்டோ.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-16-300x200.jpg)
5. நடிகை ஸ்ரேயா:
சமீபத்தில் இணையத்தில் 10 வருட நினைவுகள் என்ற பெயரில் 10 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிரும் சேலன்ஞ் பரவியது. அப்போது நடிகை ஸ்ரேயா பகிர்ந்த புகைப்படம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-17.jpg)
6. நடிகர் விஜய் தேவரகொண்டா:
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா குழந்தை பருவ புகைப்படம். பார்த்த உங்களுக்கு மட்டுமில்லை பகிர்ந்த எங்களுக்கும் ஷாக்கிங் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-18-300x225.jpg)
7. அனுஷ்கா ஷெட்டி:
இவருக்கு அறிமுகமே வேண்டாம். அனைத்து மொழிகளிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்து விட்டு, இன்றைய இளம் ஹீரோயின்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழும் அனுஷ்கா ஹெட்டியின் பழைய புகைப்படம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-19-300x169.jpg)
இதுப்போன்று தினம் தினம் சினிமா பிரியர்களுக்காகவே சிறப்பு புகைப்பட தொகுப்புகள் வெளியாக் இருக்கின்றன. தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமா செய்திகளுடன் இணைந்திருங்கள்.