tamil cinema news : தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் மனைவிகளை அதிகம் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டும். ஆனால் படத்தின் கேப்டனாக நிற்கும் இயக்குனர்களின் மனைவிகள் பெயர் கூட பலருக்கும் தெரிவதில்லை. காரணம், திரையில் புது புது முகங்களை அறிமுகப்படுத்தி ஒரே நாளில் அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு போய் விடும் இயக்குனர்களில் அதிகமானோர் தங்களது குடும்பங்களையும் மனைவிகளையும் வெளியில் அதிகம் தெரியப்படுத்துவது இல்லை.
அவர்களின் புகைப்படம், பின்புலங்களை கூட யாரிடமும் பகிர்வதில்லை. அவர்களின் திரைப்படங்களின் வெற்றி கொண்டாட்டத்தில் தான் சில தங்களது குடும்பங்களை அழைத்து வருவார்கள். சிலர் மேடை ஏறும் போது தான் ஓ! இவங்க மனைவி தானா இவங்கனு நாம தெரிஞ்சிப்போம். அப்படி அதிகம் வெளியில் தெரியாத தமிழ் சினிமா இயக்குனர்களின் மனைவிகளின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் வாங்க!
1. இயக்குனர் ராஜூ முருகன்:
ஜோக்கர், குக்கூ போன்ற வெற்றி படங்களை தந்து தமிழ் சினிமாவின் தரத்தை வெற லெவலுக்கு காட்டிய ராஜூவின் மனைவி நமக்கு நன்கு அறிமுகமாக சன்மியூசிக் விஜே ஹேமா தான். ஆனால் பலருக்கு இந்த தகவல் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/D5hNaYMWsAc7vNF_20182-12.jpeg)
2. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்
இவரை பற்றி அறிமுகமே வேண்டாம். தொடர் வெற்றி படங்க்ளுக்கு சொந்தக்காரர் ஆன முருகதாஸ் மனைவியின் பெயர் ரம்யா. இவர் எந்த ஒரு விருது விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள மாட்டார். முருகதாஸ் எங்கு சென்றாலும் தனது மகனை தான் அதிகம் அழைத்து செல்வார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-38-1024x769.jpg)
3.இயக்குனர் பாலா :
திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து தான் பாலா மனைவியின் புகைப்படம் வெளியாகியது. இவர் தனது சொந்த அத்தை மகளை திருமணம் செய்துக் கொண்டதாகவும், இவர்களின் திருமணம் வீட்டிலேயே நடந்ததாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை எதுமே இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-34-1024x576.jpg)
4.இயக்குனர் வெங்கட் பிரபு:
வெங்கட் பிரபுவின் அழகான குடும்பம் இதுதான். இவரின் தம்பி கூடிய விரைவில் மாப்பிள்ளை ஆக போகிறார். பெண் பார்க்கும் படலம என அனைத்து வேலைகளையும் அண்ணி தான் செய்து முடித்திருப்பதாகவும் சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-56-1024x576.jpg)
5. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்:
தமிழ் சினிமாவின் நம்பர் ஓன் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமாரின் மனைவி இவர் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-58.jpg)
6. இயக்குனர் ராஜா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-57.jpg)
தனது குடும்பத்தின் மீது எப்போதுமே ராஜா மிகவும் நெருக்கமாக இருப்பார். தனது பிள்ளைகளை மிகவும் நேசிக்கும் ராஜா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை தனக்கு நெருக்கமான படம் என்று பலமுறை பதிவு செய்துள்ளார்.