ஒரு ஸ்பூன் எண்ணெய்… குக்கரில் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம்!

பேட்சிலர்கள் தாங்கள் சமைத்ததை நொந்துக் கொண்டே சாப்பிடாமல் இருக்க கீழே உள்ள டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இனி எல்லாம் வசந்தமே!

White Rice Cooking In Cooker Tamil Video: இல்லத்தரசிகளின் இனிய நண்பன் குக்கர் என்றால், பேட்சிலர்களின் அண்ணப்பூரணியும் அதுவே. குக்கரில் சோறு சமைப்பது எளிது என்றாலும், சில நுணுக்கங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் இல்லத்தரசிகள் குடும்பத்தில் திட்டு வாங்காமலும், பேட்சிலர்கள் தாங்கள் சமைத்ததை நொந்துக் கொண்டே சாப்பிடாமலும், நிம்மதியாக சாப்பிட வழி பிறக்கும்.

குக்கரில் சமைக்கும் பெரும்பாலானோரின் புகார், குக்கர் அடியில் சோறு அடி பிடிக்குது என்பது தான். அடுத்ததாக, சாத குலைந்து விடுகிறது என குற்றம் சாட்டுவர். குக்கரில் உதிரி உதிரியாக சோறு சமைக்கும் டிப்ஸ் உங்களுக்காக இதோ.

நீங்கள் சமைக்க தேவையான அரிசியை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட டம்ளரில் அளந்து, டம்ளர் அளவை நினைவில் வைத்துக் கொள்ளவும். இது, குக்கரில் அரிசிக்கு தண்ணீர் ஊற்ற எளிமையான வழியாக இருக்கும்.

உலை அரிசி சாதத்தைப் போல, குக்கரில் சோறு சமைக்கவும் முதலில் அரிசியை ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த அரிசியை தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள். முதல் அலசலுக்குப் பிறகு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கைகளால் அரிசியை கழுவுங்கள். அதன் பிறகு, குறைந்தது இரண்டு முறை என, மொத்தம் 3 முறை அரிசியை நன்றாக அலசிக் கொள்ளுங்கள்.

White rice

ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் தான் சரியான பதம். நீங்கள் சசைக்க எடுத்துக் கொண்ட அரிசி புதியது என்றால், 2 1/2 டம்ளர் தண்ணீர் அளவே போதுமானதாக இருக்கும்.

அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியப் பின், அதனுள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எண்ணெய் ஊற்றுங்கள். இது, சோறு குலையாமல் உதிரி உதிரியாக இருக்க உதவும்.

குக்கரில் உதிரியான சாதம் செய்வது எப்படி? – வீடியோ

குக்கரில், விசில் போடாமல் மிதமான சூட்டில் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும் போது விசில் போட்டு மூட வேண்டும். விசில் சத்தம் 3 முறை கேட்டதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின், உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.

குக்கரில், பிரஷர் தானாக இறங்கிய பிறகு, மூடியை திறங்கள். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். உலை வடி சாதம் போலவே குக்கரிலும் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம் இதுதான். இனி என்ன கவலை? எல்லாம் வசந்தமே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cooking tips cooking white rice in cooker batchelor choice

Next Story
எவ்வளவுதான் மேக்-அப் போட்டாலும் இது முக்கியம் – பிக் பாஸ் அர்ச்சனா பியூட்டி டிப்ஸ்!Bigg Boss Archana Beauty Tips Skincare Secrets Make up Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com