உலகின் துயரங்களை எல்லாம் போக்குவதற்கு ஏதேனும் வழிபாடு உள்ளதா என்று யோசித்து கொண்டிருந்த சனாதன முனிவரிடம் அந்த வழியாக வந்த தீர்க்கதமஸ் என்னும் முனிவர் தீபாவளி திருநாளில் ஜோதி மயமான இறைவனை வழிபாடு செய்வதே அதற்கு ஒரே வழி என்று தெரிவித்தார். இதைக்கேட்டு மகிழ்ந்த சனாதன முனிவர், அந்த வழிபாட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு தீர்க்கதமஸ் விரிவான அதன் வழிபாடுகளை எடுத்துக்கூறினார்.
"ஐப்பசி மாதம் வரும் துலா மாதத்தில் தேய்பிறை திரயோதசியில் பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தியில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதிகம்.
இதனால் அன்று, சூரியோதயத்துக்கு முன் இந்தப் பொருள்களைப் போற்றுவதுடன், சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், கிருபர், பரசுராமன், அனுமன், விபீஷணன் ஆகியோரையும் வழிபட, அவர்களது ஆசியால் துன்புறுத்தலில் இருந்து விடுபடலாம்” என்று எடுத்துரைத்தார்.
தீபாவளி விடியற்காலை எண்ணெய்க் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாகச் சொல்வார்கள். இந்த நன்னாளில்,'வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாய் நீரிலோ நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும்' என்ற பெரியவர்களின் வாக்கு. இதனால் தவறாமல் எல்லோரும் நாளைக் காலையிலேயே நீராடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். காலைப் பொழுதிலேயே வீட்டில் தவறாமல் விளக்கேற்றி அந்த ஈசனை வழிபட வேண்டும்.அப்படி செய்யும்போது தீப ரூபத்தில் மகாலட்சுமி எழுந்தருள்வாள். எனவே தவறாமல் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
நடப்பு ஆண்டில் தீபாவளி தினத்தில், அமாவாசையும் சேர்ந்து வருவதால் பகலில் முன்னோர் வழிபாடும் இல்லாதவர்களுக்கு உதவுவது மிகவும் புண்ணியம் சேர்க்கும் காரியமாகும். தீபாவளி முருக பக்தர்களுக்கு கந்த சஷ்டி மிகவும் முக்கியமான பண்டிகை. வழக்கமாக கந்த சஷ்டித் திருவிழா தீபாவளிக்கு மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு தீபாவளி அன்று (நவம்பர் 04) கந்த சஷ்டி தொடங்கிவிடுகிறது. எனவே தவறாமல் முருக வழிபாடு செய்வது அவசியம்.
சஷ்டிவிரதம் ஆறுநாள்களும் இருப்பவர்கள் தவறாமல் நாளையே அந்த விரதத்தைத் தொடங்கிவிடுவது நல்லது. அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்கு முன்பு எண்ணெய் தேய்த்து, நீராடிவிட வேண்டும். 4.30 மணிக்கு முன்பாகவும் நீராடலாம். ஆனால் ஆறுமணிக்குப் பின் நீராடுவதைத் தவிர்ப்பது நல்லது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்க உகந்த நேரம்: மாலை 5.00 மணி முதல் 6.30க்குள்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil