Advertisment

தீபாவளி வாழ்த்து 2023: அழகிய தமிழில் வாட்ஸ் அப் மெசேஜ்கள், ஸ்டேட்டஸ் இங்கே!

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கவும், வாழ்த்து செய்திகளை அனுப்பவும் இந்த வாழ்த்துக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Diwali Wishes

தீபாவளி வாழ்த்துக்கள்

ஆண்டு முழுவதும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் பண்டிகை நாட்களில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் உட்பட தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்வதை தவறவிடுவதில்லை. அதுவும் பொங்கல், தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாட்களில் தங்களது ந்ணபர்களுடன் கூடி விமர்சையாக கொண்டாடுவது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.

Advertisment

அந்த வகையில் நாளை (நவம்பர் 12) இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர் வேலைக்காக சென்ற பலரும் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் அனைவரையும் நேரில் சந்தித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை தற்போது ஒரு ஸ்மார்ட்போனிலேயே முடிந்து விடுகிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதில் இருந்து மக்கள் நேரில் சந்தித்து பேசிக்கொள்ளும் நிகழ்வு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் பண்டிகை நாட்களில் தங்களது நண்பர்களை நேரில் சந்திதாலும் அவர்களுக்கு ஸ்மார்ட்போனில் இருந்து வாழ்த்து செய்திகளை அனுப்பும் வழக்கமும் இருந்து வருகிறது.

அந்த வகையில் உங்கள் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை சொல்லவும், ஸ்டேட்டஸ்களாக வைக்கவும் இந்த வாழ்த்துக்களை பயன்படுத்துங்கள்.

இனிமை, இளமை, புதுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த தீபாவளி முதல் நீங்கள் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபத் திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும். உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்!

அனைவரும் இந்த தீபாவளி திருநாள் அன்பு, நிம்மதி, சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறேன். இந்த தீபாவளியில் அளவு கடந்து மகிழ்ச்சியாக இருங்கள்!

தீபம் போல் உங்கள் உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மத்தாப்பு போல் மகிழ்ச்சி பொங்க, தீபத்திருவிழா தீபாவளியில், வான்வெளி வரைக்கும் உற்சாகம் பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்த தீபாவளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரட்டும். உங்கள் அனைவருக்கும் இனிமையான தீபாவளி வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் குடும்பங்கள் கொண்டாடும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த தீபாவளி வாழ்த்து மெசேஜ்களை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி பாதுகாப்பான தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment