New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/easter-1200.jpg)
Happy Easter Sunday 2022 : இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்தெழும் நாளை ஈஸ்டர் நாளாக கொண்டாடப்படுகிறது.
Happy Easter Sunday 2022 Wishes Images, Messages, Status: உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் டே. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்தெழும் நாளை ஈஸ்டர் நாளாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான தினத்தில் வரும் இந்த நாள், இந்த ஆண்டு அது ஏப்ரல் 17, 2022 அன்று கொண்டாடப்பட உள்ளது.
கிறிஸ்துவ நாட்காட்டியில் குறிக்கப்பட்ட ஒரு முக்கியமான நாளில், மரணத்தை வென்ற இயேசுவின் வெற்றியைக் கொண்டாடுகிறது. இந்த நாளில், மக்கள் விரதம் அனுசரித்து தங்கள் அன்புக்குரியவர்களுடன் தேவாலயத்திற்கு வருகை தந்து கொண்டாடி வருவார்கள். இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கொண்டாட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்
ஆனாலும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் சில அன்பான செய்திகள் மற்றும் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ்ச்சியடைவார்கள். இந்த ஈஸ்டர் உங்களுக்கு புதிய நம்பிக்கையையும் கொண்டுவரும்
ஒரு பிரார்த்தனையைப் போல உங்கள் இதயத்தைத் தொட்டு, அற்புதமான கருணையின் பரிசைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் வகையான ஈஸ்டர் உங்களுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.