உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை பொங்கல் திருநாள். உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று.
வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், தமிழ் மாதமான தை முதல்நாள் கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இது வழக்கமாக ஜனவரி 14 அல்லது 15 அன்று பொங்கல் பண்டிகை தொடங்கும். இந்த ஆண்டு, பொங்கல் 2023 ஜனவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது.
பொதுவாக பொங்கல் கொண்டாட்டத்தில் சாமிக்கு படைப்பது மட்டுமல்லாமல் இனிமையான தமிழில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பது தமிழரின் பாரம்பரிய பண்பாடாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான விடுமுறை நாட்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை , உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
இது சூரிய கடவுளை போற்றும் நான்கு நாள் திருவிழாவாகும். கூடுதலாக, இது சூரியனின் வடக்குப் பயணமான உத்தராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 4 நாட்கள் திருவிழாவில் போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு கொண்டாட்டத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்த நன்னாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான அழகான, சிந்தனைமிக்க பொங்கல் தமிழ் வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள். பொங்கல் என்ற சொல் தமிழ் இலக்கியத்திலிருந்து உருவானது. இது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே நீண்டகாலமாக கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டம். நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி (தை) முழுவதும் நான்கு நாட்கள் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.
பொங்கல் வாழ்த்து : பொன் பொருள் செல்வம் மகிழ்ச்சி இவை அனைத்தும் அறுசுவை பொங்கலைப்போல் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் பொங்கிட பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மங்கலம் பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம்.. மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும் எண்ணியது ஈடேற தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்பும் ஆனந்தமும் பொங்கிட அறமும் வளமும் தழைத்திட இல்லமும் உள்ளமும் பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வெறுப்பை தீயிட்டு பொசுக்கி, பகைமை களைந்து அன்பை பேணி பகைவனையும் நண்பனாக்கி கொண்டாடுவோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இல்லங்களை தூய்மைபடுத்தி, அரிசிமாவில் கோலம் போட்டு மாவிலை தோரணமிட்டு, புத்தாடை உடுத்தி காய்கறி, பழம், கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்துடன் கதிரவனுக்கு நன்றி செலுத்துவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்.
புதிய நெல்லை அறுத்து வந்து பொதிந்திருக்குமு் உமியகற்றி புத்தரசி முத்தெடுத்து பொங்கலிடும் வேளையில், பொங்கலோ பொங்கலென பாவையறும் குலவையிட பொங்கி வரும் பொங்கலைப்போல் பொங்கட்டும் மகிழ்ச்சி எங்கும்.
விடிகிற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும் இந்த தை திருநாள் முதல் பொங்கல் வாழ்த்துக்கள்.
வருகிறது புதுப்பொங்கல் வளரும் தைப்பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கும் வாடிவாசல் அரிசிமாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீட்டு வாசல்
தை திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.