இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களில் நவராத்திரியும் ஒன்று. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு படையல் வைத்து வழிபடுவார்கள். மேலும் நவரத்தி நாளில் கொலு வைப்பது பண்டிகை கொண்டாட்டங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்த நாளில் பலரும நவராத்திரி விரதம் கடைபிடிப்பார்கள்.
Advertisment
இந்த நவராத்தி தினம் கொண்டாடப்படும் 9 நாட்களில், முதல் 3 நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கை அம்மனை வேண்டி வழிபடுவார்கள். அதேபோல் 2-வது 3 நாட்கள் செல்வ செழிப்போடு இருக்க மகாலட்சுமியை வழிபாடு செய்வார்கள். கடைசி 3 நாட்களில், கல்வி, கலை உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் கலைகளை வழிபடுவது வழக்கம். மொத்தத்தில் இந்த 9 நாட்களும், விரதம் மேற்கொள்வது, கொலு வைத்து பூஜை செய்து வழக்கமான சம்பிரதாயமாகும்.
நவராத்திரி தினத்தில் செல்வ செழிப்போடு இருக்க மகாலட்சுமியை வழிப வேண்டிய 2-வது 3 நாட்களில் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து பிரபல நாட்டுப்புற பாடிகியும், யூடியூபருமான அனிதா குப்புசாமி தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். அதில், பொறாமமை, ஆணவம் உள்ளிட்ட குணங்களால், செல்வத்தை தேடிப்போக கூட நம்மால் முடியாமல் போகிறது. நமக்குள் இருக்கும் அரசுரர்கள், நமக்கு எதிராக தீங்குகளை போக்குவதற்காக நவராத்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
வறுமை நிலையை போக்குவதற்காக, நவராத்திரியின் 2-வது 3 நாட்கள் நாம் லட்சுமி மகாலட்சுமியை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டில் 9 விளக்குகள் வைத்து வழிபடுவது, நவராத்திரியின் 9 நாட்களும் கும்பம் வைத்து வழிபட வேண்டும். இந்த கும்பத்தின் அலங்காரத்தை தினமும் மாற்றியமைக்க வேண்டும. மகாலட்சுமியை வழிபடும்போது எப்போதுமே பின்க் நிறந்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல் மகாலட்சுமி அம்பாளுக்கு அலங்காரம் செய்யலாம்.
மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக போற்றப்படுவதால், உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி வழிபடலாம். இந்த 3 நாட்களும் மகாலட்சுமி தாயாருக்கு உரிய சோத்திரங்களை சொல்ல வேண்டும். மந்திரங்கள் தெரிந்தால் அதையும் சொல்லலாம். வீட்டில் வழிபாடு செய்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, அங்கேயும் வழிபாடு செய்துவிட்டு உங்களால் முடிந்த உணவை சமைத்து எடுத்து சென்று, அன்னதானம் செய்யலாம். இவ்வாறு வழிபடும்போது, மகாலட்சுமியின் அனுகிரகம் நமக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“